இளையர் அறிவியல் களஞ்சியம்/அந்துவான் லோரான் லாவாசியர்

விக்கிமூலம் இலிருந்து

அந்துவான் லோரான் லாவாசியர் : ஃபிரெஞ்சு நாட்டின் புகழ் பெற்ற அறிவியல் மேதை அந்துவான் லோரான் லாவாசியர். இவர் 1748ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் தாட்டின் தலைநகரான பாரிஸில் பிறந்தார். வேதியியல் வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியவர்.

அந்துவான் லோாான் லாவாசியர்

இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற துறைகளைவிட மிகவும் பின் தங்கியிருந்த

அரச ஆய்வுக்கூடத்தில் லாவாசியர்

வேதியல் துறையை மிகப்பெரும் வளர்ச்சியடைய வழியமைத்தவர். வேதியல் கண்டுபிடிப்புகள் பலவற்றையும் உலகுக்குக் கண்டறிந்து கூறியவர்.

எரியும் பொருளும் ஆக்சிஜனும் இணைவதால் ஏற்படும் வேதியியல் கலப்பே எரிவதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தார். ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் சேர்ந்து உருவாகும் கூட்டுப்பொருள்தான் நீர் என்பதை ஆய்வு பூர்வமாக நிறுவினார். அதே போன்று ஆக்சிஜன் வாயுவும் நைட்ரஜன் வாயுவும் இணைந்த ஒன்றே காற்று என்பது இவரது கண்டுபிடிப்பே யாகும்.

இவர் காலம்வரை நீரும் காற்றும் தனிமங்களாகவே கருதப்பட்டு வந்தன. லாவாசியர் தன் ஆராய்ச்சி மூலம் அவை தனிமங்கள் அல்ல என்பதை நிரூபித்தார். அதோடு அமையாது, எவை எவை தனிமம் என்பதற்கான பட்டியலையும் தயாரித்து உலகுக்கு வழங்கினார். அதுவே இன்றுவரை ஆதாரபூர்வமான பட்டியலாகவும் இருந்து வருகிறது.

அதுவரை வேதியியல் துறைக்கான கலைச் சொற்களை அவரவர் போக்கில் பயன்படுத்திவந்தனர். இதனால் பெரும் குழப்பங்கள் நிலவின. அப்போது வழங்கிய கலைச்சொற்களையெல்லாம் திரட்டி முறைப்படுத்தி, பட்டியலிட்டார். பல சொற்களை உரிய முறையில் மாற்றித் திருத்தி அமைத்தார். அப்பட்டியலில் இடம் பெற்ற வேதியியல் கலைச்சொற்களே இன்றளவும் வேதியியல் விஞ்ஞானிகளாலும் பிற வல்லுநர்களாலும் கையாளப்பட்டு வருகிறது.

கலைச்சொல் முறைப்படுத்தலோடு வேதியியல் கொள்கைகளையும் ஒழுங்குபடுத்தினார். இவ்வாறு வேதியியல் துறையை பலவகையிலும் கட்டுக்கோப்பான அமைப்புடன் கூடிய துறையாக மாற்றியமைத்ததனால் இவர் 'வேதியியலின் தந்தை’ என அத்துறை அறிஞர்களால் போற்றப்படுகிறார்.

அரசுப் பணியை மேற்கொண்டிருந்தபோது ஃபிரெஞ்சு அரசு அறிவியல் கழகத்தில் செயலாற்றினார். ஃபிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட புரட்சி அரசு இவர்மீது ஐயம் கொண்டது. அதன் விளைவாக ஃபிரெஞ்சு புரட்சி அரசால் கொல்லப்பட்டார்.