இளையர் அறிவியல் களஞ்சியம்/இணைப்பார்வை தொலைநோக்கி

விக்கிமூலம் இலிருந்து

இணைப்பார்வை தொலைநோக்கி : (Binocular Telescope) : இதை 'முபட்டை இணைப்பார்வை நோக்கி’ என்றும் கூறுவர். சாதாரண தொலைநோக்கியைவிட இது இரு வகைகளில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. முதலாவது பார்க்கும் பொருளின் பிம்பம் லென்சின் உதவியின்றி நேராக விழுகின்றது. இரண்டாவது ஒளிக்கதிர் ஒவ்வொன்றும் முப்பட்டையின் எதிரொலிப்பினால் மூன்று மடங்கு தொலைநோக்கியின் நீளத்தைக் கடந்து செல்வதால் மூன்று மடங்கு நீளமுள்ள தொலைநோக்கியின் மூலம் பார்த்தால் எவ்

இணைப்பார்வை தொலைநோக்கி (உட்புறத் தோற்றம்)

வளவு உருப்பெருக்கம் பெற முடியுமோ அவ்வளவு உருப்பெருக்கை இதன்மூலம் எளிதாகப் பெற முடிகிறது. மேலும் கையடக்க வடிவில் இருப்பதால் கையாளுவதும் எளிது. காணும் காட்சிப் பொருளும் தெளிவாகத் தெரியும். இதைக் கப்பலிலிருந்தும் போர் முனைகளிலிருந்தும் தொலைவிலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்த்துச் செயல்பட இக்கருவி உதவுகிறது.