உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/கப்பல்

விக்கிமூலம் இலிருந்து

கப்பல் : உலகப் பரப்பில் மூன்றில் இரு பங்கு கடல்கள் என்பது நீங்கள் அறிந்ததே. பெரும்

பண்டைய பாய்மரக் கப்பல்

நீர்ப்பரப்புகளைக் கடக்க மனிதன் கண்டறிந்த போக்குவரத்துச் சாதனமே கப்பல்கள். நீரின்

நவீன வசதிகள் கொண்ட கப்பல்

ஆழத்துக்கும் பரப்புக்குமேற்ப கப்பல்களின் அளவும் வடிவும் வேறுபடும்.

நீர் முழ்கிக் கப்பல்

முற்காலத்தில் கப்பல்கள் பெரும்பாலும் காற்றின் உதவியால் செல்லும் பாய்மரக் கப்பல்களாகவே இருந்தன. பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப கப்பல்களின் அளவும் வடிவும் பெரிதும் மாறுபட்டு அமையலாயின. இயந்திர நுட்பங்களோடு கூடிய பெருங்கப்பல்கள் உருவாக்கப்பட்டன. இவை பயணிகளை ஏற்றிச் செல்லவும் சரக்குகளை ஏற்றிச் செல்லவும் தனித்தனியே அமைந்தன. மற்றொரு வகையில் பயணிகளையும் பொருட்களையும் கொண்டு செல்வனவாக வடிவமைத்து உருவாக்கப்பட்டன. பெருமளவுக் கடற்பகுதிகளைக் கொண்ட நாடுகள் நாட்டுப் பாதுகாப்புக்கெனத் தனிக் கடற்படைக் கப்பல்களை உருவாக்கிக் கொண்டன. இதனால் கப்பல் கட்டும் கலை வெகுவாக விரைந்து வளர்ந்தது.

பயணிக் கப்பல்கள் பார்ப்பதற்கு அழகானவைகளாகக் கட்டப்பட்டன. நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட பல மாடிகளோடு அமைந்த தங்கும் அறைகள், உணவுக்கூடம், சமையற்கட்டு, ஓய்வுஅறை நூலகம், விளையாடும் இடம், நீச்சல்குளம் என எல்லா வகையான வசதிகளோடும் அமையலாயின. கப்பலினுள் திரையரங்கம், வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ள கடைகள் எல்லாம் உண்டு. தொலைக்காட்சி, வானொலி வசதிகளும் உண்டு. ஒரு வகையில் பயணியர் கப்பல் ஒரு மிதக்கும் குட்டி நகரமாகும்.

நாடுகளுக்கிடையே பொருட்களை ஏற்றிச் செல்லவும் எண்ணெயைக் கொண்டு செல்லவும் தனித்தனிக் கப்பல்கள் உள்ளன. சாமான்களைக் கொண்ட பெட்டகங்கள் (Containers) அடுக்கப்படக்கூடிய வசதிகளும் உணவுப் பொருட் கள், எண்ணைய்களைக் கொண்டு செல்ல தனி வசதிகளோடு கூடிய கப்பல்கள் தனித்தனியேஉள்ளன. இவற்றின் அமைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது கடற் படைக் கப்பல்கள். கடற் படைக் கப்பல்களில் பல வகைகள் உள்ளன. பீரங்கிக் கப்பல், நீர் மூழ்கிக் கப்பல், விமானத்தாங்கிக் கப்பல் என்பனவாகும் அவை.

தொடக்கத்தில் காற்றின் உதவியால் செல்லும் பாய்மரக்கப்பல்களாக அமைந்தன.அதன் பின் ஏற்பட்ட அறவியல் வளர்ச்சியின் விளைவாக நீராவிக் கப்பல்கள் உருவாக்கிச் செலுத்தப்பட்டன. அதன்பின் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக டீசலில் இயங்கும் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. கடற்பயணத்தின்போது விபத்து எதுவும் ஏற்பட்டால் தப்பிச் செல்ல பாதுகாப்போடு கூடிய உயிர்காப்புப் படகுகள் ஒவ்வொரு கப்பலிலும் உள்ளன.