இளையர் அறிவியல் களஞ்சியம்/கிரகங்கள்

விக்கிமூலம் இலிருந்து

கிரகங்கள் : விண்வெளியில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் கோள்கள் ஒன்பது இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அவையாவன: புதன் (Mercury), வியாழன் அல்லது குரு (Jupiter), சனி (Saturn), யுரெனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune), புளூட்டோ (Pluto) பூதி ஆகியனவாகும். இவற்றை முதன் முதலில் கண்டறிந்து கூறியவர் போலந்து நாட்டு விஞ்ஞானியான கோப்பர்நிக்கஸ் என்பவராவார்.

கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியை கிரகித்து அவற்றை மீண்டும் பிரதிபலிப்பனவாகும். இவ்வாறு இவை சூரிய ஒளியைக் கொள்வதாலேயே இவை கோள்கள் என அழைக்கப்படுகின்றன. கிரகங்கள் அனைத்தும் நீளவட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இதனால் இதைப் பூமியின் துணைக்கோள் என்கின்றனர்.

கிரகங்கள் அனைத்தும் சூரியனின் மேற்பரப்பிலிருந்து சிதறியதால், அவை சூரியனின் ஈர்ப்பாற்றலோடவே இயங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கிரகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ஈர்ப்பாற்றலைக் கொண்டுள்ளன. சான்றாக பூமியில் 80 கிலோ எடையுள்ள ஒருவர் செவ்வாய் சென்றால் அவரின் எடை 40 கிலோ மட்டுமே இருக்கும். அவரே வியாழன் கோளுக்குச் சென்றால் அங்கே அவரின் எடை 140 கிலோவாக இருக்கும்.

விண்வெளியில் எண்ணற்ற அவை கோளங்கள் உள்ளன. ஒளிரும் கோளங்களும் ஒளிராக் கோளங்களுமாகும். பூமி, சந்திரன் போன்றவை சூரிய ஒளியைப் பெற்று, பிரதிபலிப்பதால் இவை ஒளிராக் கோணங்கள் எனக் கூறப்படுகின்றன. சூரியன், நட்சத்திரங்கள் போன்றவை இயற்கையான ஒளியைப் பெற்றிருப்பதால் இவை ஒளிரும் கோளங்கள் என அழைக்கப்படுகின்றன.

கிரகங்கள்

ஓர் ஒளிரும் கோளத்தை ஒளிராக் கோளம் மறைக்கும்போது ஒளிர் கோளத்தின் ஒளி மறைக்கப்படுவதே கிரகணம் எனக் கூறப்படுகிறது. கிரகணம் என்ற சொல்லுக்கு 'மறைவு' என்பது பொருளாகும். கிரகணங்களைப் பற்றி பண்டுதொட்டே மக்கள் அறிவர்.

கோளங்கள் அனைத்துமே விண்ணில் சுற்றி வருகின்றன. அவ்வாறு ஒரே நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் சந்திரன் சூரிய ஒளியை மறைக்கும். அப்போது, சூரியன் ஒளி பூமியின் மேல் படாமல் சிறிது நேரம் தடுக்கப்படுகிறது. இதுவே சூரிய கிரகணம் ஆகும். அவ்வாறே சந்திரனும் பூமியும் சூரியனைச் சுற்றி ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரன்மீது விழும் சூரிய ஒளியைப் பூமி தடுத்து விடுகிறது. இதனால் சூரிய ஒளி பெறாத சந்திரன் ஒளியை பிரதிபலிப்பதில்லை. இதனால் சந்திரன் நம் பார்வைக்குத் தெரி

சந்திர கிரகணம்

யாமலே போய்விடுகிறது. இதுவே, 'சந்திர கிரகணம்' ஆகும். இவை நடுப்பகுதி அல்லது முழுமையான கிரகணமாகவும் அமைவதுண்டு, கிரகணங்கள் உலகின் எப்பகுதிக்கு நேராக ஏற்படுகிறதோ அப்பகுதி மக்களுக்கு மட்டுமே கிரகணம் தெரியும். சந்திர, சூரிய கிரகணம் போன்றே வேறுசில கிரகங்களிலும் கிரகணம் ஏற்படுவதுண்டு என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.