இளையர் அறிவியல் களஞ்சியம்/தொலைபேசி

விக்கிமூலம் இலிருந்து

தொலைபேசி : 'டெலிபோன்' எனப்படும் தொலைபேசி இன்றைய நவீன வாழ்வின் பேரங்கமாக அமைந்துள்ளது எனலாம். தொலைவில் உள்ளவர்களுடன் விரும்பிய

தொலைபேசிக் கருவியின் உட்புறம்

நேரத்தில் பேசப் பயன்படும் இக்கருவி அறிவியல் தந்த அருஞ் செல்வமாகும்.

நாம் இக்கருவி மூலம் பேசும் பேச்சொலி ஒலி அலைகளாக்கப்பட்டு, பின் மின்சக்தியாக மாற்றப்படுகிறது. மின் கம்பி வழியாக வரும் மின் சக்தி நீண்டதூரம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு வரும் மின் சக்தி மறுமுனையில் மீண்டும் ஒலி அலைகளாக மாற்றப்பட்டு,

தொலைபேசி இயங்கும் முறை

பேச்சொலி முழுமையாக கேட்கப்படுகின்றது. இதுவே தொலைபேசியின் செயற்பாடு.

தொலைபேசிக் கருவியை முதன்முதலில் கண்டறிந்தவர் அலெக்ஸாண்டர்கிரஹாம்பெல் எனும் அமெரிக்க அறிவியல் அறிஞராவார். அவர் 1876ஆம் ஆண்டில் இதைக் கண்டு பிடித்தார்.

தரைப்பகுதியில் கம்பிகள் மூலம் தொலைபேசி செய்தி அனுப்பப்படுவது போன்றே கடலடியில் போடப்பட்டுள்ள கம்பி வடங்கள் மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. இதன் மூலம் நாடுகளுக்கிடையேயும் செய்தித் தொடர்பு கொள்ள முடிகிறது.

கையட்டக்கத் தொலைபேசி

இன்று உலகெங்கும் வாழும் மக்கள் எளிதாகச் செய்தித் தொடர்பு கொள்ள செயற்கைக் கோள் வாயிலாக தொலைபேசி இணைப்புப் பெற்றுள்ளனர். இவ்வாறு பல்வேறு வகைகளில் செய்தி பெறும் தொலைபேசிகளை ஒருங்கிணைக்க தானியங்கித் தொலைபேசித்தொடர்பகங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றன.

தொலைவில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் பேசும் பேச்சொலியை மட்டுமே இது வரை கேட்க முடிந்தது. இப்போது அடுத்த முனையில் பேசுபவரின் முகத்தையே தொலைபேசிக் கருவி மூலம் பார்க்கவும் முடியும். இதை 'காட்சித் தொலைபேசி' என அழைக்கிறார்கள். -