இளையர் அறிவியல் களஞ்சியம்/வில்பர் ரைட்
வில்பர் ரைட் : முதன்முதலில் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களில் இவர் மூத்த சகோதரர் ஆவார். இவர் 1867 -இல் பிறந்தார். இளைய சகோதரர் ஆர்வில் ரைட் 1871இல் பிறந்தார். சகோதரர்கள் இருவரும் ஒன்றாக இனைந்தே விமானக் கண்டு பிடிப்புச் சாதனையை நிகழ்த்தினர்.
வானப் பயணம் பற்றி முன்பு எழுதப்பட்டிருந்த நூல்களை யெல்லாம் சகோதரர்கள் இருவரும் நன்கு கற்றனர். 1999 -இல் காற்றாடிகளையும் இயந்திரம் இல்லாத விமானங்களையும் பயன்படுத்திப் பறக்க முயன்றனர். இதில் பலமுறை தோல்வியடைந்தனர். தோல்வி யடையும் ஒவ்வொரு முறையும் பல்வேறு மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்து மீண்டும் பறக்க முயன்றனர். மூன்றாவது முறை செப்பம் செய்யப்பட்ட இயந்திரமில்லாத விமானத்தில் பறந்தனர். இவ்வாறு ஆயிரம் முறை பறந்து நல்ல பயிற்சி பெற்றனர்.
தரையிலிருந்து விமானத்தை மேலே கிளப்புவதைவிட மேலே நிலையாக இருக்கவும் பறக்கவும் கட்டுப்படுத்தவும் செய்ய முயன்றனர். இதற்காக விமானத்துக்கு சிறகு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றனர். பின் முற்செலுத்துச் சுழலியை இவர்களே கண்டுபிடித்து வடிவமைத்தனர். விமானத்திற்கான இயந்திரத்தையும் இவர்களே வடிவமைத்துத் தயாரித்தனர்.
இவ்வாறு முழுமையாக உருவாக்கப்பட்ட விமானத்தை ரைட் சகோதரர்கள் 1908ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி முதன் முதலாக ஓட்டிப் பறந்தனர். அமெரிக்காவில் உள்ள வடகரோலினாவில் கிட்டிஹாக் அருகில் டெவில்ஹில்லில் இவ்வெள்ளோட்ட விமானப் பயணம் நடைபெற்றது, முதலில் ஆர்வில் ரைட் 12 நொடிகளில் 120 அடியும் இறுதியில் விமானம் 69 நொடிகளில் 852 அடி தூரமும் பறந்தார். இவ்விமானத்திற்கு 'ஃப்ளையர்' எனப் பெயரிட்டனர். சுமார் ஆயிரம் டாலருக்குக் குறைவான செலவில் சிறகு உட்பட 40 அடி அகலமும் 750 பவுண்டு எடையுமுள்ள அதில் 170 பவுண்டு எடையுள்ள இயந்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் குதிரைத் திறன் 12 ஆகும். இவர்களின் விமானக் கண்டுபிடிப்பும் வானில் பறந்த நிகழ்ச்சியும் மக்களின் கவனத்தை ஏனோ ஈர்க்கவில்லை.
அடுத்து இவர்கள் 'ஃப்ளையர் ‘II’ என்ற புதிய விமானத்தை உருவாக்கி 1904இல் 105 முறை பறந்து காட்டினர். அடுத்த ஆண்டே மேலும் பல பயனுள்ள மாற்றங்களோடு கூடிய நடைமுறைக்கேற்ற புதிய விமஸனம் 'ஃப்ளையர்111'-ஐ உருவாக்கினர். இவ்வளவுக்கும் பிறகும்கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இத்தகைய ஐயத்தை பாரிசில் வெளி வந்த 'ஹெரால்டு டிரிப்யூன்' எனும் இதழ் வெளியிட் இதைப் பொய்ப்பிக்க கருதிய வில்பர் ரைட் பாரிஸ் சென்றார். அங்கே ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்கினார். 1912இல் வில்பர் ரைட்டுக்கு நச்சுக் காய்ச்சல் ஏற்பட்டு மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 45 ஆகும்.