உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கேள்வி
Appearance
52. கேள்வி
பிறர் கூறுவதற்குச் செவி சாய்க்கக் கற்றுக் கொள். தவறாய்ப் பேசுவோரிடமிருந்து கூட அறிவு பெறுவாய்.
-ப்ளூட்டார்க்
பிறர் மூளையோடு நம் மூளையைத் தேய்த்து ஒளி பெறச் செய்தல் நலம்.
-மாண்டேய்ன்
ஒருமுறை அறிவாளியுடன் சம்பாஷிப்பது ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தருவதாகும்.
-சீனப் பழமொழி
காது நல்லதைத் தவிர வேறெதையும் அறிவிற் சேர்க்கா வண்ணம் எல்லாவித விஷயங்களையும் கேட்கப் பழகிக் கொள்ளல் நலம்.
-ஏராஸ்மஸ்
★ ★ ★