உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/18. முதலாளித்துவத்தின் முதுகெலும்பு முறிய...

விக்கிமூலம் இலிருந்து

18. முதலாளித்துவத்தின்
முதுகெலும்பு முறிய...

முதலாளிக்குக் கிடைக்கும் இலாபம் அவர்கள் மேனி மினுக்குக்குப் பயன்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது!

காப்பாற்றுவதற்குப் போதுமானதைத் தவிர, மீதிப் பணத்தை வரிபோட்டு அரசாங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும்!

அப்படிச் செய்தால், முதலாளிகள் பெருகமாட்டார்கள்- அவர்களிடம் பொருளும் குவியாது; வரிபோட்டுஅவர்களிடம் இருந்து வாங்கும் பணத்தில் மக்களுக்கு நல்லது செய்யலாம்; இதனால் முதலாளித்துவம் ஒழிந்து விடும்--ஓங்கி வளராது!

முதலாளித்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்க இன்னொன்றும் செய்யலாம்; தனிப்பட்ட எவரும் எந்தத் தொழிற்சாலையையும் நடத்த அனுமதிக்கக் கூடாது;

முதலாளிகளிடம் இருக்கும் எல்லா ஆலைகளையும் அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்; எல்லாத் தொழிற்சாலைகளையும் சர்க்கார் ஏற்று நடத்த வேண்டும் அவ்விதம் செய்தால், அதில் கிடைக்கும் இவாபம் அரசாங்கத்தைச் சாரும் எந்தத் தனிப்பட்ட முதலாளிகளையும் சாராது; அதனால் முதலாளித்துவம் வளராது--பூண்டே இல்லாமல் ஒழிந்து விடும்! அப்படித்தான் இன்றைய உலகில் பலர் வருகிறார்கள்!

முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிக்க அவ்வப்போது அதைத் தடுக்க வேண்டும். அளவுக்கு மீறி வளர இடம் தராமல் தலைமேல் தட்டிச் சரிபடுத்திக் கொண்டே செய்து வர வேண்டும்!