உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்பாராத முத்தம்/பாடல் 12

விக்கிமூலம் இலிருந்து


12

பெற்றோர் பெருந்துயர்

விளக்கு வைத்து நாழிகை ஒன்றாயிற்று. மீசை
வளைத்துமே லேற்றி அந்த மான நாய்கள்
                                     வந்தான்.
”அன்னம்” என்று கூவினான் அன்னோன்
                                     மனைவிதனை;
“என்ன” என்று கேட்டே எதிரில்வந்து
                                    நின்றிருந்தாள்.
"பையன் வெறிபிடித்த பாங்காய் இருக்கின்றன்!
செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டி
                                      யண்டை
உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம்.
                                  ஓலைதனைத்
தொட்டுக் கணக்கெழுதி தோதாய் விலைபேசி
வாரம் இரண்டாயினவாம். இது என்ன
கோரம்!" எனக்கூறிக் குந்தினான் பீடத்தில்!
அச்சமயம் பொன்னன் அருகில் வந்து நின்றுமே
அச்சமய மாக "ஐயா" எனக்கூவிப்,
பொன்முடியான் பூங்கோதை வீட்டுக்குப்
                                    போனதையும்,
புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்ததையும்,
சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள்.

"நல்லதுநீ போபொன்னா” என்று நவின்று, பின்,
மான் நாய்கன் தான் மனத்துயரம் தாங்காமல்
"தான தருமங்கள் நான்செய்து பெற்றபிள்ளை,

ஏன்என் றதட்டாமல் இன்றுவரைக் கும்சிறந்த
வானமுதம் போல வளர்த்த அருமை மகன்,
வெள்ளை உடுத்தி வெளியி லொருவன் சென்றால்
கொள்ளிக் கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில்

வீட்டில் அரச நலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா
நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு

செல்லப்பா என்று சிறக்க வளர்த்த பிள்ளை,
கொல்லைப் புறத்தில் கொடுமைபல பட்டானா"

என்று பலவாறு சொல்லி இருக்கையிலே,
நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்தது
                                         போல்,
பண்டாரம் வந்து பழிப்பதுபோல் பல்லிளிக்கக்
கண்டஅந் நாய்கள் கடிந்த மொழியாக
"நில்லாதே போ” என்றான் 'என்னால் நிகழ்ந்த
                                       தில்லை.
சொல்லென்று தங்கள்பிள்ளை சொன்னபடி
                              போய்ச்சொன்னேன்.
பூங்கோதை ஓலைதந்து போய்க்கொடு என்றான்;
                                        அதனை
வாங்கிவந்து பிள்ளை வசம்சேர்த்தேன்
                                    வேறென்ன"
என்றுரைத்தான் பண்டாரம்! கேட்டாள் இதை
                                       நாய்கன்.
"சென்றதற்குக் கூலிஎன்ன சேர்ந்த துளக்"
                                      கென்றான்,

'பத்து வராகன் பணம் கொடுத்த தாகவும்
முத்துச் சரத்தை அவள் மூடித்தந் தாள் எனவும்
ஈந்த மடையன் இயம்பினான் உங்களிடம்?
அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்!
நாடிஒன்று கேட்டான் எனக்கென்ன!
                                  தந்ததுண்டு
மூடிமுக்காடிட்டு மூஞ்சியிலே தாடி ஒட்டி,
நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில்,
மான் வந்தாற் போல்வந்து வாய்மூத்தம் தந்து
                                      விட்டுப்
போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை; மெய்க்
                                       காதல்
ஆய்விட்டாள் பொன் முடிமேல்! அப்பட்டம்!
                                  பொய்யல்ல'
என்று. பண்டாரம் இயம்பவே; நாய்கனவன்
நன்று தெரிந்துகொண்டேன் நான் சொல்வதைக்
                                       கேட்பாய்
என்னை நீ கண்டதாய் என்மகன் பால்
                                  சொல்லாதே;
அன்னவனை தானோ அயலூருக்குப் போகச்
சொல்ல நினைக்கின்றேன். அன்னவன்பால்
                                     சொல்லாதே
செல்லுவாய் என்றுரைத்தான், பண்டாரம்
                                   சென்றுவிட்டான்.
பண்டாரம் போனவுடன் நாயகன் பதை
                                     பதைத்துப்
பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன்,

"அன்னம் இதைக்கேள்! அவளை வடதேசம்
சென்றுமுத்து விற்றுவரச் செப்ப நினைக்
                                     கின்றேன்
நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர்
தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும்
முத்துவிற்கப் போகின்றார். நம்பொன் முடியையும்
ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழித்துவிடும்;
கொஞ்நாள் சென்றால் மறப்பான் குளறுபடி
நெஞ்சில் அவன்மயக்கம் நீங்கும் எனச்
                                 சொன்னான்.
அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச்
சொன்னது நன்றென்றாள் துணிந்து.