எதிர்பாராத முத்தம்/பாடல் 28
Appearance
28
தெய்வப் பாடல்
குமரகு ருபரன் பாடல்
கூறிப்பின் பொருளும் கூறி,
அமரரா தியர்வி ருப்பம்
ஆம்படி செய்தான் ; மற்றோர்
அமுதப்பாட் டாரம் பித்தான்.
அப்பாட்டுக் கிப்பால் எங்கும்
சமான மொன் றிருந்த தில்லை
சாற்றுவோம் அதனைக் கேட்பீர் ;
தொடுக்கும் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே ! நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகும்நறுஞ்
சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்
தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்
கேற்றும் விளக்கே! வளர்சிமைய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமான் பிடியே ! எறிதரங்கம்,
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு வுளத்தில் அழ
கொழுக எழுதிப் பார்த் திருக்கும்
உயிர் ஓவியமே ! மதுகரம் வாய்
மடுக்கும் குழற் காடேத் துமிள
வஞ்சிக் கொடியே வருகவே!
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே !"