கலைக்களஞ்சியம்/அகத்தியான் பள்ளி

விக்கிமூலம் இலிருந்து

அகத்தியான் பள்ளி தஞ்சாவூர் ஜில்லா திருமறைக்காட்டுக்குத் தெற்கே ஒரு மைலிலுள்ளது. அகத்தியர் உறைந்து வழிபட்ட தலம். அவருடைய உருவச்சிலை கோயிலில் இருக்கிறது, இத்தலம் திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சுவாமி: அகத்தீச்சுரர். அம்மன்: பாகம்பிரியா நாயகி.