கலைக்களஞ்சியம்/அகூட்டி
Appearance
அகூட்டி அமேரிக்கக் கொறிக்கும் பிராணி. முயலளவுள்ளது. செம்பப்டை நிறம் மெல்லிய
கால்களும் சிறிய வாலுமுள்ளது. ஓடும்போது சிறுமான் ஓடுவதுபோலக் காணும். நீரில் நன்றாக நீந்தவல்லது. இரவில் சஞ்சரிப்பது. பகலில் மரப் பொந்துகளிலும் வேர்களின் சந்துகளிலும் பதுங்கிக் கிடக்கும். இது இலை, வேர் ,கிழங்கு, கொட்டை, கனி முதலியவற்றைத் தின்னும். கரும்புத் தோட்டங்களிலே இதனால் மிக்க கெடுதி விளைகிறது. இதன் இறைச்சி வெளுப்பானது. உண்பதற்கு நன்றாக இருக்கும். சீமைப் பெருச்சாளி வகையைச் சேர்ந்தது. கேவி என்றும் அழைப்பார்கள்.
பாகுபாடு: பாலூட்டி, கொறிக்கும் பிராணி. இனம்: டாசிப்ராக்டா அகூட்டி (Dasyprocta aguti)