உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அசிகுணி

விக்கிமூலம் இலிருந்து

அசிகுணி (செடிப் பேன்) (Aphid, Plant louse): மிகச்சிறிய பூச்சி. இலைமேலும் இளங்கிளை மேலும் சில சமயங்களில் வேரின்மேலும் இருந்து கொண்டு ஊசிபோன்ற தன் வாயுறுப்புகளாகிய தாடைகளால் செடியின் மெள்ளியதோலைக் குத்தி உள்ளிருக்கும் சாற்றை மூட்டுப் பூச்சி, பேன் முதலியவை மனிதனுடைய இரத்தத்தை இழுப்பதுபோல, உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதலியவை விளையும் மோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை , கருமை, வெண்மை முதளிய பல நிறங்கள் உள்ள வகைகளும் உண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள்
அசிகுணி
1. பெண் சிறகுள்ளது
2. பெண் சிறகில்லாதது
3. கட்டெறும்பு கேழ்வரகு வேரில் அசுகுணிகளை இட்டு வளர்த்தல்
a எறும்பு
b அசுகுணி

இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை மிகச்சில நரம்புகளுள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதளியவை விளையும் தோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை, கருமை, வெண்மை முதலிய பல நிறங்கள் உள்ள வகைகளுண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள் இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை. மிகச் சில நரம்புள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சிக் கொண்டே யிருக்கும்போது அதன் பின் முனையில் குதத்திலிருந்து சிறிய துளித்துளியாய்த் தேன்பனி வந்துகொண்டேயிருக்கும். இதை எறும்பு தனது உணர் கொம்புகளால் மாறி மாறி அசுகுணியின் பின்பாகத்தைத் தடவுவதுண்டு. அது அசுவிணிகளை ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குக் கொண்டுபோய் குடியேற்றுவதுமுண்டு. சூழ்நிலையும் வானிலையும் ஒவ்வாத காலங்களில் அசுகுணியைப் பத்திரமாகச் சேமித்து காப்பதும் உண்டு. இக்காரணங்களினால் அசுகுணியை எறும்புப்பசு என்றழைப்பார்கள். எறும்புகளின் உதவியாலே ஒரு தோட்டம் முழுவதும் மிகவிரைவில் அசுகுணி பிடித்து பிடித்துபோகும். தேன் பனி இலைமீது சிந்தி மெழுகுபோல் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

அசுகுணியின் இனப்பெருக்கமும் வாழ்க்கை வட்டமும் அதிசயிக்கத் தக்கவை. குளிர்காலம் வருவதற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்கின்றன. பெண் முட்டையிடுகின்றது. இந்த முட்டை குளிர்கால முட்டை எனப்படும். முட்டை நிலையில் குளிர்காலம் கழிகிறது. வசந்தம் வந்ததும் முட்டைகள் பொரிந்து, அவற்றிலிருந்து இறக்கையில்லாத பெண்கள் வெளிவருகின்றன. இவை ஆணோடு சேராமலே கன்னிகளாகவே இனம் பெருக்குகின்றன. விந்தணுவாற் கருவுறாத முட்டைகள் (unfertilized egg) இவற்றின் உடலினுள்ளேயே வளர்ச்சியுற்று, அககுணிக்ள் வெளிவருகின்றன. இவையெல்லாம் இறக்கையுள்ள பெண்கள். இவ்வாறே ஆணின்றியே கன்னி யினப்பெருக்கத்தாலும் முட்டையாக வெளிவராமல் சிறு பூச்சியாகவே வெளிவரும் சராயுசப் பிறவியாலும் (viviparity) வேனிற்கால முழுவதும் எண்ணிறந்த தலைமுறைகள் உண்டாகின்றன. ஒரு தாய் ஒரு நாளில் இருபத்தைந்து பெண்களைப் பெறலாம். அவை ஒவ்வொன்றும் சில நாட்களில் குழந்தைகளைப் பெறக்கூடியவையாகின்றன. இதனால் இவை கணக்கற்ற எண்ணிக்கையிற் பெருகிவிடுகின்றன. இந்தப் பருவம் முடிகின்ற சமயத்தில் ஆண்களூம், முட்டையிடும் பெண்களூம் உண்டாகின்றன. அப்போது ஆணும் பெண்ணும் சேர்கின்றன. விந்தணுவாற் கருவுற்ற முட்டைகளைப் பெண் இடுகின்றது. அந்த முட்டைகளே முன்னே சொன்ன குளிர்கால முட்டைகள். இறக்கை முளைத்த பூச்சிகள் வேறு இடங்களுக்குப் பறந்துசென்று புதுச்செடிகளைப் பற்றும். இவ்வாறு இந்த் இன்ம் பரவுகின்றது. சில இனங்களிலே வாழ்க்கை வட்டம் முழுவதும் ஒரே ஆதாரச் செடியிலேயே (host plant) நடக்கும். மற்றும் சில இனங்கள் இலையுதிர்காலத்தில் வலசை போகின்றன. அந்த அசுகுணிகள் தாம் வேனிலில் வாழ்ந்துவந்த செடியைவிட்டுக் குளிர்காலத்தில் தமக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய வேறெரு வகைச் செடிக்குவலசை போகின்றன. அந்தக் குளிர்கால ஆதாரச் செடியிலே ஆணாற் கருவுற்ற குளிர்கால முட்டைகள் இடப்படுகின்றன. ஆப்பிள், பருத்தி, வெள்ளரி, முலாம்,பட்டாணி, சோளம், முதலிய பலவற்றிற்கு அசுகுணி பெருங்கேடு விளைக்கின்றது. புகையிலைத் தண்ணீரும் சவர்க்காரமும் கொண்டு அசுகுணி வளராமலும் பரவாமலும் தடுக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அசிகுணி&oldid=1496458" இலிருந்து மீள்விக்கப்பட்டது