கலைக்களஞ்சியம்/அனுடம்

விக்கிமூலம் இலிருந்து

அனுடம் (Scorpii δ, β, π) : இது வடமொழியில் அனுராதா என்று வழங்கும் 17ஆம் நட்சத்திரம். அனுராதா என்பது வெற்றி அல்லது நலன் என்று பொருள்படும். வில், முடப்பனை அல்லது விரித்த குடை போல இருப்பதாகக் கூறுவர். இது விருச்சிகராசியில் உள்ளது. இதன் நடுவிலுள்ள அன்டாரஸ் என்று மேனாட்டார் கூறும் நட்சத்திரம் முதன்மையானது. தீப்போல் சிவந்த நிறமுடையது. அதன் பக்கத்திலுள்ள நட்சத்திரம் பச்சை நிறமுடையது. விருச்சிக ராசியிலுள்ள இந்த நட்சத்திரத்தொகுதி மேனாட்டு வான அட்டவணையில் ஸ்கார்ப்பியோ என வழங்கும் நட்சத்திரங்கள் அடங்கியது. இவை சுமார் 390 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அனுடம்&oldid=1504109" இலிருந்து மீள்விக்கப்பட்டது