கலைக்களஞ்சியம்/அம்பா சமுத்திரம்
Appearance
அம்பா சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மலைமிக்க தாலூகாவாகும். இதிலுள்ள பொதியின் மலையிலே தாமிரபருணியும், அதன் உபநதிகளும் உற்பத்தியாகின்றன. தாலூகாப்பட்டணமாகிய அம்பாசமுத்திரத்தைச் சூழ்ந்துள்ள வயல்களே மாவட்டத்தில் மிகச் செழிப்பானவை. முக்கியமான கைத்தொழில் நெசவு. பக்கத்திலுள்ள பத்தமடை கிராமம் மெல்லிய கோரைப்பாய்க்குப் பேர் போனது; புகைவண்டி நிலையம் உள்ளது. பாபநாசத் தலத்துக்குச் செல்லும் யாத்திரிகர் இங்கு இறங்கியே போவர். இங்கு நல்ல கருங்கல் கிடைக்கிறது. பெரிய தூண்கள் செய்து அயலூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கிறது. நகர மக் : 20,356 (1951).