கலைக்களஞ்சியம்/அயோனியத் தீவுகள்
Appearance
அயோனியத் தீவுகள் ஆல்பேனியா நாடுகளின் மேலைக் கடற்கரையை அடுத்துள்ள பல தீவுகள். இவற்றில் செரிகோ, கார்ப்யூ, பேக்சாஸ், லெவ்காசி, இதக்கா, செபலோனியா, சான்டெ என ஏழு பெருந்தீவுகளும், பல சிறு தீவுகளும் உள்ளன. மொத்தப் பரப்பு : 752 ச. மைல் : மக் : 2,28,119 (1951). இத்தீவுகளில் பல மலைகள் உண்டு.
ஆதியில் ரோமானிய சாம்ராச்சியத்தின் பகுதியாயிருந்த இத்தீவுகள் பிற்காலத்தில் பலவேறு இராச்சியங்களின் உடைமையாயிருந்து, 1797-ல் நெப்போலியனால் கைப்பற்றப்பட்டன. 1815லிருந்து 1862 வரையில் பிரிட்டனுக்குச் சொந்தமாயிருந்த இவை பிறகு கிரீசோடு சேர்ந்துவிட்டன.