கலைக்களஞ்சியம்/அயோனியா
Appearance
அயோனியா ஆசியாமைனரின் மேல்கரையோரமாயுள்ள ஒரு பழைய பகுதி ; இந்நாட்டில் 30 நூற்றாண்டுகளுக்குமுன் அயோனியர் என்னும் கிரேக்கர் சிலர் வந்து, குடியேறியதால் இப்பெயர் பெற்றது. அயோனியர் 12 சுதந்திர நகரங்களைப் பிணைத்து, ஒரு நாட்டுக் கூட்டத்தை ஸ்தாபித்தனர். கிரேக்கருடைய இலக்கியம், கலை, தத்துவம் முதலியவற்றிற்குப் பிறப்பிடமா யிருந்திருக்கிறது. மைலீடஸ், எபிசஸ், மாக்னீஷியா முதலிய இடங்களில் பண்டைய நகரங்களின் சிதைவுகள் பல காணக்கிடைக்கின்றன.