கலைக்களஞ்சியம்/அரபிக் கடல்
Appearance
அரபிக் கடல் இந்திய சமுத்திரத்தின் வடமேற்குப் பகுதி ; இந்தியாவுக்கு மேற்கேயுள்ளது; ஏடன் வளைகுடாவும் ஓமன் வளைகுடாவும் இக்கடலின் பகுதிகள். ஏடன் வளைகுடா இதைச் செங்கடலோடு பாபெல்மான்டெப் ஜலசந்தியினால் இணைக்கிறது. ஓமன் வளைகுடா இதைப் பாரசீக வளைகுடாவுடன் சேர்க்கிறது. ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடைபெறும் கடல் வாணிபம் இக்கடலின் வழியே செல்கிறது. இலட்சத் தீவுகள் இங்குள்ள முக்கியமான தீவுகள். சொகோட்டிரா தீவு ஆப்பிரிக்காவின் வடகிழக்கே இருக்கிறது. ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சின், கொழும்பு என்பவை இக்கடலை நோக்கியுள்ள முக்கியத் துறைமுகங்கள்.