கலைக்களஞ்சியம்/அருங்கலச்செப்பு
Appearance
அருங்கலச்செப்பு சமண அறநூல். குறள்வெண்பாக்களால் ஆகியது. திருவாரூருக்கருகில் தீபங்குடியில் விளங்கிய அருங்கலான்வயத்தாரால் எழுதப்பட்டது. அருங்கலான்வயம் என்பது தென்னாட்டுச் சைன சங்கங்களிற் சிறப்புற்ற நந்தி கணத்தின் ஒரு பிரிவு. இந்நூலைப் பின்பற்றியே அறநெறிச்சாரம் எழுதப்பட்டதால், இது அறநெறிச்சாரம் எழுதப்பெற்ற கி. பி. பதின்மூன்றும் நூற்றாண்டிற்கு முந்தியதாய் இருக்கலாம்.