கலைக்களஞ்சியம்/அறிவுடை நம்பி
Appearance
அறிவுடை நம்பி சங்க காலத்தவன். இவனைப் பாண்டியன் அறிவுடை நம்பி எனவும் கூறுவர். மக்கட்பேற்றின் பெருமையைப் பற்றிப் பாடியுளன் (புறம் 188). பிசிராந்தையரால் (புறம் 184) பாடப்பெற்றவன். இப்பாண்டியன் நெய்தலையும் குறிஞ்சியையும் பாடியுள்ளான். இவன் பாடல்கள் நான்கு: (நற்:15; குறுந் : 230; புறம் : 188;அகம்: 28).