உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அறுகை

விக்கிமூலம் இலிருந்து

அறுகை ஒரு குறுநில மன்னன்; சேரன் செங்குட்டுவனுக்கு நண்பன் ; பழையன் என்னும் மோகூர் மன்னனுக்குப் பகைவன். மோகூர் மன்னனுக்கு அஞ்சிப் பதுங்கியிருந்த அறுகைக்குதவி செய்வதற்கு, மோகூர் மன்னனைச் சேரன் செங்குட்டுவன் வென்று, அவனுடைய காவல் மரமாகிய வேம்பை வெட்டி, வெற்றி முரசையுங் கைக்கொண்டான் (பதிற். 44).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அறுகை&oldid=1455534" இலிருந்து மீள்விக்கப்பட்டது