கலைக்களஞ்சியம்/அலெப்போ
Appearance
அலெப்போ : இதைத் துருக்கி மொழியில் ஹாலெப் என்று கூறுவர். வட சிரியாவில் குவெல்க் ஆற்றங்கரையில் அலெப்போ மாவட்டத்தின் தலைநகரம். முன்னாளில் ஐரோப்பாவுக்கும் ஆசியாவிற்குமிடையில் நடைபெற்ற வியாபாரத்துக்குப் பேர்போன ஊர். 17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் லெவான்ட் கம்பெனியின் வியாபாரத்தலம் இங்கு நிறுவப்பெற்றது. இங்கிருந்து பட்டு, பருத்தி, உரோமம் ஆகியவற்றால் நெய்த துணிகள் கீழ்நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இப்போது பட்டும் புகையிலையும் நிறைய உற்பத்தியாகின்றன. மக் : 3,62, 541 (1950).