உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அவரோஸ்

விக்கிமூலம் இலிருந்து

அவரோஸ் (1126-1198) அரேபியத் தத்துவ சாஸ்திரி, கார்டோவா என்னுமிடத்தில் பிறந்தவர் கணிதம், மருத்துவம், தத்துவம் முதலிய பல கலைகளைக் கற்றார். கலீப் யூசுப் மன்னனுடைய நன்மதிப்பைப் பெற்றிருந்தார். இவர் வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் முதலிய இடங்களிற் சுற்றுப்பிரயாணம் செய்தார். செவிலில் (1169-1170) வரையிலும், கார்டோவாவில் 1172.லும் காதியாக இருந்தவர். 1194-95-ல் இவர்மீது சினம் கொண்ட கலீப் யூசுப் இவரது நூல்களை யெல்லாம் எரித்துவிட்டார். ஆயினும் 1198-ல் அம்மன்னனால் மன்னிக்கப்பட்டு, மராகேஷ் என்னுமிடத்திற்குத் திரும்பிவந்த அவரோஸ் அதே ஆண்டில் இறந்தார். அவரோளின் நூல்களில் பெரும்பாலானவை கை யெழுத்துப் பிரதிகளாகவே யிருக்கின்றன. இவர் நூல்களிற் சிறந்தவை அரிஸ்டாட்டிலின் நூல்களுக்கு இவர் இயற்றிய உரைகளே. 13ஆம் நூற்றாண்டில் வளர்ந்த ஐரோப்பியத் தத்துவ ஞானத்துக்கு இவை நன்கு உதவின. 'மருத்துவக் கலைக்களஞ்சியம்' ஒன்று இவர் இயற்றினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அவரோஸ்&oldid=1503206" இலிருந்து மீள்விக்கப்பட்டது