கலைக்களஞ்சியம்/அஷான்டி
Appearance
அஷான்டி (Ashanti) ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான கோல்டு கோஸ்ட்டுக் குடியேற்ற நாட்டைச் சார்ந்த ஒரு பகுதி. 1896-லிருந்து ஆங்கிலேயருக்குச் சொந்தமானது. பரப்பு : சு. 24.000 ச.மைல். கோல்டு கோஸ்ட்டு கவர்னரின் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு கமிஷனரின் ஆதீனத்தில் உள்ளது. இவருக்குக் கீழ் உள்ள உதவிக் கமிஷனர்கள் ஜில்லா நிருவாகத்தை நடத்துகின்றனர். முன்பு இது ஓர் ஆப்பிரிக்க இராச்சியமாயிருந்தது. மக் : சு. 6,00.000; தலைநகரம்: குமாசி; மக் : 78,483(1948). சி. எஸ். ஸ்ரீ.