கலைக்களஞ்சியம்/ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள்

விக்கிமூலம் இலிருந்து

ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள் நார்மானியர் இங்கிலாந்தை வெல்வதற்கு முன்பு அந்நாட்டில் பயின்ற சட்டங்கள். இவை பிற நாட்டு ஆதிக்கமின்றியே ஏற்பட்டவை ஐரோப்பியச் சட்டங்களெல்லாம் லத்தீனில் எழுதப்பட்டிருக்க, இவையெல்லாம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இவ்வாங்கிலோ-சாக்சன் சட்டங்கள் மூவகைப்படும்: 1. அரசாங்கத்தாற் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் ; 2. மரபையொட்டிய விதிகள்; 3. சட்டத் தொகுப்புக்கள். இவை பொது அமைதியைப் பாதுகாக்கும் முறையில் அமைந்தன. தந்தை, எசமானன், பிரபு முதலியவர்களுக்குப் பல உரிமைகள் அக்காலத்தில் இருந்தனவாயினும், மன்னனுடைய ஆட்சியின் முக்கியத்துவம் மற்ற அதிகாரங்களிலும் சிறந்ததாயிருந்ததால் நாட்டில் அமைதி நிலவிற்று. தனியாள் பாதுகாப்பு உரிமை, சொத்துரிமை, மணம், வாரிசுரிமை முதலியவையும் சட்டவாயிலாகக் கட்டுப்படுத்தப்பட்டன. 10,11ஆம் நூற்றாண்டுகளிலிருந்து ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள் படைமானியச் சமூக ஏற்பாட்டையொட்டி மாறியமைந்தன.