கலைக்களஞ்சியம்/ஆசந்தி
Appearance
ஆசந்தி (Cassiopia) : இதைக் காசியபி (அதாவது காசியப முனிவரின் மனைவி) என்றும் கூறுவர். இது வடக்கே W என்ற உருவத்தில் காணப்படும் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட மண்டலமாகும். இதை மேனாட்டார் காசியோப்பியா (செபீயஸ்) மனைவி என்றும், நாற்காலி நங்கை என்றும் கூறுவர்.