உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆசிரியத்துறை

விக்கிமூலம் இலிருந்து

ஆசிரியத்துறை ஆசிரியப்பாவின் இனம். நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவு நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வருவனவும் ஆசிரியத்துறைகள். சீர் வரையறையின்றி எனைத்துச் சீரானும் அடியானும் வரும். ஓரடி சீர்குறைந்துவரின் ஆசிரிய நேர்த்துறையென்பர். ஈரடி சீர் குறைந்துவரின் ஆசிரிய இணைக்குறள்துறை யென்பர்.