உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆன்செல்ம்

விக்கிமூலம் இலிருந்து

ஆன்செல்ம் (Anselm, 1033-1109) ஒருபெரிய தத்துவ சாஸ்திரி. இவர் இத்தாலி நாட்டினர்; 1060-ல் பாதிரியானார். இவர் கடவுள் உண்மையை வற்புறுத்தப் பல ஆதாரங்கள் உண்டு என்றும், அறிவிற்கும் நம்பிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாகக் கருதுவது தவறு என்றும் எடுத்துக்காட்டி. ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். 1093-ல் இவர் தம் குருவான லான்பிராங்குக்குப் பிறகு இங்கிலாந்தில் கான்டர்பரி ஆர்ச்பிஷப்பாகப் பதவி ஏற்றார் ; 1097-ல் II-ம் வில்லியமுடன் ஒத்துப்போக முடியாமல் ரோமிற்குச் சென்றார். 1100-ல் திரும்பி வந்தவர் I-ம் ஹென்ரியோடும் ஒத்துப்போக முடியாமல் நாட்டை விட்டு அகன்றார். இவர் போப்பின் அதிகாரத்தை முழுவதும் ஆதரித்ததால், இங்கிலாந்தில் மன்னனுடைய அதிகாரம் சிறிது குன்றியது. இவர் 1494-ல் திருத்தொண்டர் (Saints) குழாத்துள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.