உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆப்கானிய யுத்தங்கள்

விக்கிமூலம் இலிருந்து

ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக்கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலாயிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல்வதாக ஆங்கிலேயர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ்தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன்பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப்கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந்தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற்றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878–1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்தமும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கிலேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வியுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடாகவே இருந்துவருகிறது. பார்க்க: ஆப்கானிஸ்தானம், இந்தியா வரலாறு, வடஇந்தியா (1800-1950).