கலைக்களஞ்சியம்/ஆப்பியன் பாதை
Appearance
ஆப்பியன் பாதை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் பண்டைய ரோமாபுரியிலிருந்த ஒரு புகழ்பெற்ற சாலை. ஆப்பியஸ் என்னும் அதிகாரி அமைத்ததால் அப்பெயர் பெற்றது. அதில் சில பகுதிகள் இப்போதும் பயன்பட்டு வருகின்றன. அதன் அருகில் பூமிக்கு அடியில் கிறிஸ்தவர் அமைத்த கல்லறைகள் உள.