உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆய்மா

விக்கிமூலம் இலிருந்து

ஆய்மா (ஆவிமா,கும்பி) பெரிய மரம். 30-60அடி வளரும். இந்தியாவில் நெடுக இருக்கிறது. மலைகளில் 5,000 அடி வரையில் காணலாம். மரம் பலவித சாமான்கள் செய்ய உதவும். பட்டை பழுப்புக் காகிதம் செய்யவும் கயிறு திரிக்கவும் உதவும்; இருமல், சளிப்பு, சுரம் முதலியவற்றிற்கு மருந்து; வைசூரிக்கும் இதைக் கொடுப்பதுண்டாம். கனி மணமுள்ளது; தின்னத்தக்கது. இலை பீடி, சுருட்டுச் சுற்ற உதவும்; தஸ்ஸர் பட்டுப்புழு வளர்க்கத் தீனி. குடும்பம் : லெசிதி டேசீ (Lecythidaceae). இனம்: காரெயா ஆர் போரியா (Careya arborea).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆய்மா&oldid=1490892" இலிருந்து மீள்விக்கப்பட்டது