கலைக்களஞ்சியம்/ஆரீலியஸ், மார்க்கஸ்
Appearance
ஆரீலியஸ், மார்க்கஸ் (121-180) 161லிருந்து 180 வரை ரோமானியப் பேரரசை ஆண்டவர். இவர் காலத்தில் எதிரிகள் சாம்ராச்சியத்தின் எல்லைகளை எல்லாம் தாக்கியபடியால் இவர் ஓயாமல் போர் புரியவேண்டியிருந்தது. ஆயினும் போர்களுக்கு இடையே மற்ற அலுவல்களிலும் இவர் உள்ளம் ஈடுபட்டது. தத்துவ ஆராய்ச்சியில் மிகுதியும் ஈடுபட்டவர். இவர் இயற்றிய சிந்தனைகள் என்னும் பெயர்கொண்ட நூலில் இவருடைய தூய உள்ளப்பான்மை நன்கு வெளியாகின்றது. நல்லொழுக்கமும் நேர்மையுமே வாழ்க்கையில் மக்களின் குறிக்கோளாக இருத்தல்வேண்டும் என்று இவர் வற்புறுத்தினார். டி. கே. வெ.