கலைக்களஞ்சியம்/ஆருணியரசன்

விக்கிமூலம் இலிருந்து

ஆருணியரசன் பெருங்கதையில் வரும் பாஞ்சால நாட்டரசன். கோசல நாட்டு அரசனை வென்று, அவன் மகள் வாசவதத்தை முதலியவர்களைப் பிடித்து வந்து தன் உரிமை மகளிர்க்குத் தாதியர்களாக அமைத்தனன். ஆயர்குலத்தினருக்கு வழிவழிப் பகைஞன். அக்குல அரசுக்கு உரியவனான உதயணன் சிறைப்பட்ட போது அவனது கௌசாம்பி நகரத்தைக் கைப்பற்றி, அதனையே தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவனவன். பின்பு உதயணன் வந்து போர் செய்தபோது போது அதில் அவனால் கொல்லப்பட்டான். அப்படி இறக்கும் போதும் இவனிடம் வீரமே விளங்கிற்று.