கலைக்களஞ்சியம்/ஆருத்திரா தரிசனம்

விக்கிமூலம் இலிருந்து

ஆருத்திரா தரிசனம் : இவ்விழா மார்கழி மாதத்தல் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினத்தில் சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுவதாகும். மற்றச் சைவத்திருப்பதிகளிலும் இது கொண்டாடப்படுகின்றது. ஆருத்திரா அல்லது திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது.

நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் அபிஷேகங்களுள் மார்கழி மாதத்தில் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசி இரவு நடப்பதே மிகச் சிறப்புடையது. அபிஷேகம் மறுநாள் காலை வரையிலும் ஆகும். பிறகு தரிசனம் நிகழும்.