உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆரூடம்

விக்கிமூலம் இலிருந்து

ஆரூடம் என்பது ருஹ் என்னும் சமஸ்கிருத வினைப்பகுதியடியாகப் பிறந்த சொல். அதன் பொருள் ஏறியிருப்பது, அதாவது உதயமாயிருப்பது என்பது. இது பலன் சொல்லும் சோதிட முறைகளுள் ஒன்றாக வழங்கி வருகிறது. திடீரென ஒருவனைப் பற்றி ஒருவர் வினவினால், அவ்வினாக் கேட்கும் வேளையில் உதயமாயிருக்கும் இலக்கினத்துக்குக் கிரகங்களின் நிலைகளைக்கொண்டு, அந்தந்தக் கிரகங்களின் தன்மை வாயிலாகப் பலனைச் சொல்லுவதே இதன் இலக்கணமாம். ஆரூட ராசி முதல் சூரிய ராசிவரை எண்ணி வந்த தொகையை, உதய ராசி முதலாக எண்ணிக் கண்ட ராசிநாதனைக் கொண்டு பலன் சொல்லுவது ஆரூடம் என்று கூறப்பெறும். உதய ராசி என்பது வினாக்கேட்ட ராசி. ஆரூட ராசி என்பது வினவுவோன் சொல்லும் எண் முதலியவற்றின் ராசி. ஆரூடத்தில் வல்லவர்கள் ஜாதகமில்லாதவர்க்கு, மிகவும் நுட்பமான குறிப்புக் களையும் கணக்குக்களையும் கொண்டு முழு ஜாதகத்தையும் கணித்துவிடுவராம். வே. ரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆரூடம்&oldid=1457371" இலிருந்து மீள்விக்கப்பட்டது