கலைக்களஞ்சியம்/ஆர்டென்
Appearance
ஆர்டென் (Ardennets) வடபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய பகுதிகளிலுள்ள மலைகளும் காடுகளுமாகும். சராசரி உயரம் 1,611 அடி.. ஐரோப்பாவிலுள்ள சில பெரிய ஒக் மரக் காடுகளும் பீச் மரக் காடுகளும் இங்கே இருக்கின்றன. மியூஸ் ஆறு பாய்கிறது. வடபகுதியில் இரும்பும் நிலக்கரியும் கிடைக்கின்றன. பள்ளத்தாக்குகள் செழிப்பானவை.