கலைக்களஞ்சியம்/ஆர்மா
Appearance
ஆர்மா (Armagh) வட அயர்லாந்தின் கவுன்டிகளில் ஒன்று. பரப்பு : 489 ச. மைல். மக் : 1,14,226 (1951). வடபாகம் செழிப்பு மிக்கது. தென்பகுதி மலைப் பாங்கானது; மழை குறைவாகையால் வேளாண்மைக்கு ஏற்றதன்று. உருளைக்கிழங்குகளும் ஓட்ஸ் தானியமும் பயிரிடப்படுகின்றன. கால்நடைகள், கோழிகள், பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இங்குப் பழத்தோட்டங்கள் மிகுதி. லினென் கைத்தொழில் நடைபெறுகின்றது. ஆர்மா இதன் தலைநகர். இது முக்கியமான வியாபார ஸ்தலம்.