கலைக்களஞ்சியம்/ஆவா

விக்கிமூலம் இலிருந்து

ஆவா பர்மிய அரசின் தலைநகராக விளங்கியது. இது மாந்தலேயிலிருந்து 6 மைல் தொலைவில் ஐராவதி நதிக்கரையில் உள்ளது. இதை 1364ஆம் ஆண்டு தடோமின்பாயா என்ற அரசன் நிறுவினான் இதன்பின் நான்கு நூற்றாண்டுகள் வரை இது தலைநகராக இருந்தது. அரண்மனையின் சில பகுதிகளும் கோயில்களும் பாழடைந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றன. பழங்காலத் தலைநகரான அமரபுரமும் இதன் அருகில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆவா&oldid=1458037" இலிருந்து மீள்விக்கப்பட்டது