கலைக்களஞ்சியம்/ஆவொசெட்
Appearance
ஆவொசெட் நீண்ட காலுள்ளதும் ஆழமில்லாத நீரில் நடந்துசெல்வதுமான பறவை. உடல் வெண்மையாகவும் சிறகு கறுப்பாகவும் இருக்கும். தலையிலும் கழுத்திலும் பழுப்புக்கோடு விழுந்திருக்கும். அலகு சப்பையாக, மெல்லியதாக நீண்டு மேலுக்கு வளைந்திருக்கும். ஆழமில்லாத சேற்றில் இந்த அலகினாலே கிளறிக்கிளறி அங்குள்ள புழு முதலிய பிராணிகளைத் தின்னும். நீரில் மிதக்கும் பொருள்களையும் தின்னும். கேடு விளைவிக்கும் பூச்சிகளையும் தின்பதால் இது மனிதனுக்கு உதவி செய்வது. கோடைக் காலத்தில் இது வடக்கே பிரயாணம் செய்யும். இதன் உணவில் பூச்சி 40, மற்றப் பிராணி 25, விதை, இலை முதலியன 35 சதவீதமாக இருக்கின்றன. உள்ளான், ஸ்டில்ட்டு முதலியவை இதற்குச் சொந்தம். சாதி : ரிகர்விராஸ்ட்ரா.