கலைக்களஞ்சியம்/ஆஸ்ட்வால்டு

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்ட்வால்டு (Ostwald 1853-1932) ஜெர்மானிய ரசாயன அறிஞர். ரீகா என்னும் நகரிற் பிறந்து பிற்காலத்தில் அங்குப் பேராசிரியரானார். இதன் பின் லைப்சிக் நகரில் பௌதிக, ரசாயனக்கழகத்தின் தலைவராக இருந்தார். தற்காலப் பௌதிக, ரசாயனத் துறையைத் தோற்று வித்தோருள் இவரும் ஒருவர் எனலாம். மின்சார ரசாயனத் துறையையும், கரைவுகளையும் இவர் விரிவாய் ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டார். முதல் உலகப்போரில் ஜெர்மனியில் நவச்சார ஆவியிலிருந்து நைட்ரிக அமிலத்தைப் பெறும் முறையைக் கண்டுபிடித்து வெடிமருந்து உற்பத்திக்கு உதவினார். பௌதிக ரசாயனத் துறையில் வழங்கும். சோதனை முறைகளின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார். ரசாயன வினை வேகங்களையும் இவர் ஆராய்ந்தார். இவரது முறை தற்போது உலகெங்கும் வழங்குகிறது. 1909-ல் இவர் நோபெல் பரிசு பெற்றார்.