உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆஸ்ப்பென்

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்ப்பென் (Aspen) பாப்லர் என்னும் பெரிய மரவகை. இலைகள் நீண்ட மெல்லிய கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். மூச்சு விடுவது போன்ற சிறிய மென்காற்றுக்கும் இவை அசைந்தாடும். நடுங்கும் ஆஸ்ப்பென் என்றே ஓர் இனம் உண்டு. இந்த மரத்தால் தட்டு, மரவை, குடுவை முதலிய பாத்திரங்கள் செய்வார்கள். கரியாகச் சுடுவதற்கும் காகிதம் செய்யும் கூழுக்கும் இது பயன்படும். குடும்பம்:சாலிக்கேசீ. சாதி : பாப்புலஸ். பார்க்க: பாப்லர்.