கலைக்களஞ்சியம்/இக்பால், சர் முகம்மது
Appearance
இக்பால், சர் முகம்மது (1875-1938)
முதலில் உருதுவிலும் பின்னர்ப் பாரசீக மொழியிலும் சிறந்த கவிகள் செய்தவர். சீயால்கோட்டில் பிறந்து, லாகூரில் கல்விகற்று, 1905 வரை ஆசிரியராயிருந்து பின்னர் பாரிஸ்டரானார். ஜெர்மனியில் டாக்டர் பட்டம் பெற்றார். பாரசீகத் தத்துவ சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்துள்ளார். இவருடைய தேசபக்திப் பாடல்களும் மதப் பாடல்களும் போற்றப்படுகின்றன.