உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

விக்கிமூலம் இலிருந்து

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்ககாலப் புலவர். பத்துப் பாட்டுக்களில் சிறுபாணாற்றுப்படையை ஏறுமாநாட்டு நல்லியக்கோடனைத் தலைவனாகக் கொண்டு எழுதியவர். இடைக்கழி நாடு என்பது சென்னைக்குத் தென்மேற்கில் உப்பங்கழிகளுக்கு இடையே உள்ள சிறு நாடு. இந்நாட்டிலே நல்லூர் என்ற ஊரும் உள்ளது.