கால்டுவெல் ஒப்பிலக்கணம்/018-033

விக்கிமூலம் இலிருந்து

முன்னிலை ஒருமைப் பெயர்





கௌர
மொழிகள்
திராவிட
மொழிகள்




மொழி வடிவங்கள் மொழி வடிவங்கள்




(வடமொழி த்வம், தவ், தெ; ஸி, ஸ் தமிழ் நீ, நின், நுன், ஐ, இ, ஆய், ஓய்
(துருக்கி ஸென்) கன்னடம் நீன், நீனு, நீ, நின், ஐ, எ, ஈயெ, ஈ, இ
ஹிந்தி து தூ(ன்), தெ துளு ஊ, நின், நி.
வங்காளி தூ(இ), து, தொ மலையாளம் நீ, நின்
மராட்டி தூ(ன்), த தெலுங்கு நீவு, ஈவு, நீ, நின், வு, வி
துதம் நீ, நின், இ.
குஜராதீ தூ(ன்), த கோதம் நீ, நின், இ
சிந்தீ து(ன்), தொ கோண்டு இம்ம, நி, ஈ
கு ஈனு, நீ, இ.
ஓராவோன் நீயென்
இராஜமஹால் நின்
பிராகுவி நீ, நா.
பெஹிஸ்
தன் சித்திக்
அட்டவணை
நீ




கெளர மொழிகளின் இடப் பெயர்களுக்கும் திராவிட மொழிகளின் இடப் பெயர்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேற்றுமை யிருப்பதை நோக்க, 'அம் மொழிகளின் திரிபுக்கு மூலகாரணமான தாக்குதல்கள் வேறெவையாயினும் ஆகக்கூடும், திராவிட மொழிகள் ஆகா என்பது தெற்றெனப் புலப்படுகின்றது. ஆனால், அதே இடப் பெயர்களின் ஆராய்ச்சியாலேயே பல வடமொழிகளிலும் சித்திய விகுதியாகிய னகரம் இருப்பது காணலாம். அதனோடு, தன்மையில் வட இந்திய மொழிகள் ஒன்றிலேனும் வடமொழி எழுவாயுரு இல்லாமல், துருக்கிய மொழியின் எழுவாயைப் போன்ற மை(ன்) அல்லது ம(ன்) என்ற சித்திய தோற்றமுடைய உருவே நிலவுதல் காண்க. ஒருவேளை எதிர்கால ஆராய்ச்சிகளால் திராவிட உறவு உண்டென்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். எனவே, வட இந்திய மொழிகளின் வட மொழிச் சார்பற்ற பகுதியும், தென் இந்திய மொழிகளும் இரண்டும் ஆரியச் சார்பற்றவை என்பதும், இரண்டும் சித்தியச் சார்புடையவை என்பதுந் தவிர வேறு எவ்வகையிலும் ஒப்புமையுடையன அல்ல என்றே துணியத் தகும்.

இனி, டாக்டர் குண்டெர்ட் வட இந்திய மொழிகளில் மட்டுமல்ல, வட மொழியிலேகூட, திராவிடத் தாக்குக் காணப்படுகிறது என்கிறார்.[1] இந்தி மொழியை ஆராய்ந்த கிரெளஸ் என்பவரோ, வடமொழிச் சார்பற்ற பகுதி யென்றொன்று அவ்வளவா யிருந்திருக்க வழியில்லை என்று கூறி, அதற்குக் கீழ்வரும் காரணங்களைக் காட்டுகிறார்: (1) அம்மொழியின் பழமையான இலக்கண நூலார் அதனைக் குறிப்பிடாதது. (2) வட மொழிச் சார்பற்றதென விரைந்து துணியப்பட்ட சொற்கள், நுண்ணிய ஆராய்ச்சியால், வட
  1. ТҺе Journal of the German Oriental Society for 1869.
மொழி யென்று பெரும்பாலும் நிறுவப்பட்டு வருகின்றமை. (3) வடமொழி வளர்ச்சியுற்ற காலத்தில், பிறமொழித் தாக்குதல்களால் வட இந்திய மொழிகள் திரிபுற்றமைக்கு என்னென்ன நியதிகள் காணப்பட்டனவோ அந்நியதிகளை இக்கால வடநாட்டு மொழிகளும் பின்பற்றிவருகின்றமை.

இச் செய்தியைக் குறித்து 1872-ல் பீம்ஸ் என்பார் ”ஆரியச் சார்பற்ற இக் கால இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்”[1] என்ற நூலில் பின்வருமாறு விளக்கியுள்ளார்: ”இனி, வடமொழியுமல்லாத ஆரியமுமல்லாத சொற்களைப் பற்றி ஆராய்வோம். ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது தமக்குமுன் அங்குக் குடியிருந்த மக்களோடு நெடுநாள் போரிட்டு நாட்டை அவர்களிடமிருந்து பறித்தாக வேண்டியிருந்தது. அத்தகைய போர்களுக்கிடையே அமைதி நிலவிய காலமும் இருந்திருத்தல் வேண்டும். அப்போது இரு திறத்தினரும் கலந்து ஒருவருடன் ஒருவர் கருவிப் போர் செய்யாது, வாழ்க்கைப் போர் நடாத்தியிருப்பர். ஆரியால்லாதா ரிடையே ஆரியரது தாக்கே மிகுதியாயிருந் திருப்பினும், ஆரியரிடையே ஆரியரல்லாதார் தாக்கும் ஒரளவிற்கு இல்லாதிருக்க முடியாது. ஆகவே, வடமொழியிலேயே ஆரியச் சார்பற்றனவாகத் தோன்றும் சொற்கள் சில காணப்படுகின்றமை இயல்பே. இக் கால வட இந்திய மொழிகளிலோ இச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. எனவே, எச் சொற்கள் ஆரியச் சொற்களாகத் தோற்றவில்லையோ அவையெல்லாம் ஆரியச் சார்பற்றவையே என்று கூற முன்வருவது வழக்கமாகிவிட்டது.

“இங்ஙனம் ஆரியர்கள் பழங்குடிகளிடமிருந்து கடன் வாங்கினர் என்ற கொள்கையை ஒப்புக்கொள்வதற்குத்

1.

தடைகள் பல உள்ளன. மொழியியலிற் பிற சான்றுகளின் துணையில்லாவிடத்து வெறும் சொல்லொப்புமை கொண்டு எதையும் துணிந்துவிட முடியாது. பல வழிகளிலும் சிறந்த போறிஞர்கூட இத் துறையில், ”ஆனைக்கும் நான்கு கால், பூனைக்கும் நான்கு கால்; ஆனைக் காலிலும் பூனைக் காலிலும் நகங்கள் காணப்படுகின்றன” என்ற ஒப்புமைகளின் பேரில் முடிவுகட்டிவிடுகின்றனர். ஒரு தமிழ்ச் சொல்லில் ஒரு பகரம் இருக்கிறது; ஒரு வடசொல்லிலும் ஒரு பகரம் இருக்கிறது. ஆகவே, வடசொல் தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது என்று கூறிவிடுவதா! முதலாவதாக, இந்தியப் பழங்குடிகளைவிட உடல்வலியிலும் அறிவுவன்மையிலும் ஆரியர்கள் உயர்வுடையவர்களாகவே இருந்தனர். எனவே, அவர்கள் ஏற்றதைவிட ஈந்ததே மிகுதியா யிருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இந்தியாவுக்கு வருவதன் முன்னரே ஆரியர்கள் சொல்வள மிக்கதொரு மொழியை உடையவராயிருந்தனர். எனவே உடை, கருவிகள், தட்டுமுட்டுகள், கன்று காலிகள், உடற் கூறுகள், உறவு முறைகள் போன்ற பொதுக் கருத்துக்களுக்குரிய சொற்களைக்கூட அவர்கள் கடன்வாங்க வேண்டும் நிலைமை அவர்களிடம் இருந்திருக்கமுடியாது. அவர்கள் கடன் வாங்கவேண்டு மென்றால் புதிய செடி கொடிகள், உயிர் வகைகள், தாம் முன்னர்க் கண்டிராத புதுப் பொருள்கள் ஆகியவற்றின் பெயர்களையேயாகும். இவற்றில்கூடத் தம் மொழிச் சொற்களையே திரித்தும் கூட்டியும் புதுச் சொற்களை ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் எல்லா மொழிகளுக்கும் பொதுவாய் அமைந்துள்ளது. மூன்றாவதாக, நிலஇயலைப்[2] பொறுத்து எழும் சிக்கல்கள் இருக்கின்றன. ஆரியர் வருகையின்போது அவர்களுடன் நட்பாகவோ பகையாகவோ உறவுபூண்ட மக்கள் யார் யார்? வந்தேறிய ஆரியர்க ளெல் லோருமே திராவிடர்களுடன் நெருங்கி உறவாடி இருக்க முடியுமா? முடியுமென்றால் எப்பொழுது? எப்படி? இன்றைய ஆராய்ச்சி நிலையில் இவ் வினாக்களுக்குத் திறம்பட விடையிறுப்பது அரிது. எனினும், அவற்றிற்கு எதாவது ஒரு வழி காணல் வேண்டும். கங்கைக் கரையினின்றும் ஆரியரால் தெற்கே விரட்டப்பட்ட மக்கள் கோலேரியரும், வடக்கே விரட்டப்பட்டவர் திபேத்துக் கலப்புமக்களும் ஆவர். எனவே, கோலேரியர் மொழிச் சான்றின்றி வட மொழிச் சொல் ஒன்று நேராகத் தமிழிலிருந்து பெறப்பட்டு விட்டது என்பதை ஒப்புக் கொள்ளுதல் சாலாது. இத்தகைய நிலைமையில் அச் சொல்லின் மூலத்தை ஆராயும் பகுதி உண்மையில் வடமொழியும், அதன் கிளைமொழிகளும் என்ற அளவுக்கே குறுகிவிடு மென்பதற்கையமில்லை. ஆழ்ந்து நோக்கினால் அதில் பெரும்பாலும் அதற்குரிய வேர்ச்சொல்லைக் காணலாம்.”

இக் கூற்று ஒருவாறு ஒப்புக்கொள்ளக் கூடியதேயாம். திராவிட மொழிகளைப் பற்றியவரை வட இந்திய மொழிகளில் அவற்றின் தாக்குதல் ஒருசிறிதுதான் இருந்திருக்கக் கூடும். ஆனால், சித்தியத் தாக்குதல்களாலோ அன்றி ஆரியச் சார்பற்ற பிற மொழிகளின் தாக்குதல்களாலோ, வட இந்திய மொழிகள் இன்றைய திரிந்த நிலையை அடைந்திருக்கக் கூடாவோ என்பது வேறு கேள்வி. திராவிடம், சித்தியம், ஆரியச் சார்பற்றவை என்பன ஒருபொருட் கிளவிகளல்ல. பீம்ஸ் என்பார் ’உயிர் ஒலிமாற்றங்கள்'[3] என்ற பிரிவில், ”ஆரிய உயிரொலிகள் இந்தியாவுக்கு வடக்கிலும் கிழக்கிலும் நடுவிலும் தெற்கிலும் உள்ள வெளி இனத்தாரால் எவ்வளவு மாறுதலடைந்தனவென்று சொல்லமுடியாது. ஆனால், மாறுதல் அடைந்துள்ளன என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மையாகும்” என்று கூறியுள்ளார். வட இந்திய மொழிகளுள் அகரமும் ஆகாரமும் ஏகாரமாக மாறியமை, இத்தகைய ஆரியச் சார்பற்ற மாறுதல் என்று அவர் கூறுகிறார். நாவடி அண்ண மெய்யாகிய ளகரத்தைப் பற்றிக் கூறுகையில், அது ரகர டகரங்களுடன் மயங்குகின்றது என்றும், அது நடு இந்தியாவிலுள்ள கோலர்களின் குழுவில் காணப்படுகிறது என்றும் அவர் உரைக்கின்றார். இக் கோலர்களுடனும் திராவிடர்களுடனும் நெடுநாள் உறவு கொண்டிருந்த மராட்டிய, ஒரியா மக்களிடை, இந்த ளகரம் மிகுதியாகப் பயில்வது வியப்பன்று என்றும் அவர் கூறுகிறார்.

“சிந்தி மொழியின் இலக்கணம்”[4] என்ற நூலில் டாக்டர் எர்னஸ்டு ட்ரம்பு ஆரியச் சார்பற்ற அல்லது தாத்தாரிய மொழியினத் தாக்குதல்கள் வட இந்திய மொழிகளில் காணப்படுகின்றன’’ என்று உறுதியாகக் கூறுகிறார்; முன் நா அண்பல் ஒலியாகிய தகர நகர ஸ்கரங்களினிடமாக, அவை நாஅடி அண்ண ஒலியாகிய டகர ணகர ஷகரங்களைப் பெரிதும் ஏற்கின்றமை அதற்குச் சான்று பகரும் என்றும் கூறுகிறார். அதே போன்று உயிர்ப்பு ஒலியாகிய ஹ என்பதைப் பிராகிருத மொழி விலக்குவது நோக்க, “அதைப் பேசிய பொது மக்களிடையே தாத்தாரியத் தாக்கு இருந்திருக்கவேண்டும். தெற்கேயுள்ள திராவிட மொழிகளில் இவ் எழுத்து இல்லாமை காண்க” என்றும் கூறுகிறார். மேலும், திராவிட மொழியினத்தைச் சேர்ந்த தெலுங்கு ‘ச்ச’, ‘ஜ’ என்ற எழுத்துக்களை ‘ட்ச’ என்றும், ட்ஸ் என்றும் ஒலிப்பது போலவே மராட்டி மொழியும் ஒலிக்கின்றது; ஆதலால் திராவிடத் தாக்கு மராட்டியிலுள்ளது வெளிப்படை என்றும் அவர் முடிவுகட்டுகிறார்.

  1. “A Comparative Grammar of the Modern Non-Aryan Languages of India" by John Beames B. C. S. 1872.
  2. Geography.
  3. Vowel Changes
  4. “Grammar of the Sindhi Language"—Dr. Ernest Trumpp.