கால்டுவெல் ஒப்பிலக்கணம்/019-033

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

எ. திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

 திராவிட மொழிகள் சித்திய மொழியினத்தோடு சேர்த்தற்குரியனவே யன்றி இந்து-ஐரோப்பிய மொழி யினத்தோடு சேர்த்தற்குரியனவாகா என்பது பேராசிரியர் ராஸ்க்[1] என்பாரின் முடிபாகும். சேர்த்தற்குரியன என்று மட்டும் கூறலாமே யன்றி, சேர்ந்தன என்று சொல்லிவிடு தற்கில்லை; அவை சித்திய மொழிகளோடு தொடர்புடையன வேயன்றிச் சித்திய மொழியினத்திலிருந்து பெறப்பட்டவை யல்ல. சித்திய மொழியினம் என்பதில் பின்னிஷ், துருக்கி, மங்கோலியம், துங்கூசஸியம் ஆகிய மொழியினங்கள் அடங்கும். ராஸ்க் என்பாரே இவ்வாறு முதன்முதல் வகைப்படுத்தினார். இம் மொழிகள் அனைத்தும் ஒரே இலக்கண அமைப்புடை யவையாய், ஒரேபடித்தான பொது விதிகளையும் பின்பற்றுகின்றன. உருபுகள் அல்லது துணைச் சொற்களைச் சேர்ப்பதனாலேயே அவை இலக்கண வேறுபா டுறுகின்றன; செமித்திய[2] மொழியினங்களிலோ பகுதியின் உயிரொலிகளை மாற்றுவதால் வேறுபா டுறுகின்றன; சீனத்திலும், பிற தனிப்பட்ட ஓரசை மொழிகளிலும் சொற்றோடரிலுள்ள சொற்களை முன்னும் பின்னும் மாற்றி யமைப்பதால் வேறுபாடுகின்றன. இவ்வகையில் இந்து-ஐரோப்பிய மொழிகளும் சித்திய மொழிகளைப் போலவே முதன்முதல், அடுக்கியல்[3] முறையையே கையாண்டிருந்தன என்று தோற்றுகின்றன. ஆனால் அவற்றின் அடைகள் அல்லது துணைச் சொற்கள் வரவரத் தேய்ந்து விகுதிகளாகவோ உருபுகளாகவோ மாறிவிட்டமையால் அவை சித்திய இனங் களைப் போலவுமின்றி, சீன மொழிகளைப் போலவுமின்றி தனிப்பட்ட ஒருவகை இனமாயின. சித்திய மொழிகளைச் சிலர் தாத்தார் மொழியினம் என்பர்; பின்னிஷ் இனம், ஆல்தாயிக் இனம், மங்கோலிய இனம், துரானிய இனம் என்றும் பலவாறாகப் பலர் கூறுவர். ஆனால் இவையனைத்தும் இப் பெரு மொழிக் குழுவிலுள்ள மொழியினங்கள் பலவற்றுள் ஒன்றிரண்டையே தனித்தனிக்குறிக்குமாதலால் அவற்றைப் பெரு மொழிக் குழுவின் பெயராகக் கொள்ளல் சாலாது. இதுகாறும், பண்டைக் கிரேக்க அறிஞர்களால் சித்தியம் என்ற பெயர் பொதுப்பட ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் இருந்துவந்த நாகரிகமற்ற பண்டை மக்களைக் குறிக்கவே பயன்படுத்தப் பெற்றுவந்துள்ளமையால் அதனைப் பெயராகவே வழங்குதலே சால்புடைத்தாம்.

பேரறிஞர் ராஸ்க் திராவிட மொழிகள் சித்தியச் சார்புடையவை எனக் கூறினவர்களுள் முதல்வராயினும், அதனைத் தெளிவுபடுத்தி விளக்க எத்தகைய முயற்சியும் அவர் செய்யவில்லை. அவரைப் பின்பற்றிய பலரும் அதேமாதிரி அவர் கூறியதைக் கூறினரேயன்றி வேறு ஒன்றும் செய்ய வில்லை. பிரிச்சார்டு[4] என்பார் தம் ஆராய்ச்சிகளில் சித்திய திராவிட மொழிகளின் சில பொதுப்படையான ஒற்றுமைகளை ஒன்றிரண்டு இலக்கணச் சார்பான எடுத்துக்காட்டுகளுடன், விளக்கிப் போயினர். ஆதாரங்களுடன் ஆய்ந்து விளக்குவது எளிதன்று. ஏனெனில் அங்ஙனம் விளக்க வேண்டுமாயின் முதன் முதலில் திராவிட மொழிகளைத் தனித்தனி ஆராய்ந்து அவற்றின் ஒப்புமையின்மூலம் அவற்றின் பண்டைய உருக்களையும் இலக்கண அமைதிகளையும் தலைமையான பண்புகளையும் அறிவதோடு, அதேமாதிரிப் பிற சித்திய உட்பிரிவுகளின் பண்புகளையும் உணர்ந்தாக வேண்டும். உலக வரலாற்றின் பொதுப்படையான அமைதிகள்”என்ற தொகுதியில் மாக்ஸ்மூலரது துரனியமொழிகள் பற்றிய நமது இன்றைய அறிவுநிலை” என்ற ஆராய்ச்சியுரை பின்னர் வெளிவந்தது. அந்நூல்மிகச் சிறந்ததொன்று. எனினும், அந்நூலில் ஆசிரியர் தாம் எடுத்துக்கொண்ட பொருள் முழுவதையும், பொதுப்படவே ஆராய்ந்துள்ளார். அதனால் ஈண்டு எடுத்துக்கொண்ட பொருளுக்கு அது புதுச்சான்றுகள் ஒன்றையும் பகரவில்லை. திராவிட மொழிகளின் இலக்கண அமைதிகளும், சொற்றொடர் முறையும் மேம்போக்காகப் பார்ப்பவர்க்குக் கூட விளங்கக் கூடுமாயினும், அவற்றின் ஒலிமுறை, அவற்றின் இடவகை மாற்றங்கள், வழக்குகள், இலக்கண உருமாற்றங்கள் முதலியவை தனிப்பட்ட ஆராய்ச்சியாலன்றி விளங்கத் தக்கவையல்ல.

இனி, இவ்வகை ஆராய்ச்சியைத் தொடங்குமுன் போட்லிங் என்பார் வரையறுத்துக் கூறிய, பின்வரும் கருத்து நினைவு கூரற்பாற்று : “ தாம் நன்கு ஆராய்ந்தறியாத மொழிகளைப்பற்றி ஒருவர் எழுத முற்படுதல் தீங்கு விளைப்பதாகும். சித்திய மொழியைப்பற்றி ஆராயவேண்டுமானால், அவற்றுள்ளடங்கிய பல்வேறு மொழிகளின் ஒப்பியல்களும் வேற்றுமையியல்களும் நன்கு தெரிந்திருத்தல் வேண்டும். பாலர்’ என்பார் எழுதிய பின்னிய மொழியாராய்ச்சிக் கட்டுரைகளும், பேராசிரியர் ஹன்ஃபல்வி' என்பார் எழுதிய துரானிய மொழியாராய்ச்சிகளும் இத்துறையில் பேருதவி புரிய வல்லனவாம். ஹங்கேரியன், வோகுல்" ஒஸ்கியாக், பின்னிஷ் ஆகிய நான்கு மொழிகளும் ஒரே பொது மொழியினத்தைச் சேர்ந்தவை என்றும், அவற்றின்

1. “On the present state of our knowledge of the Turanian Languages” by Max Muller in Bunsen's “Outlines of the Philosophy of Üniversal History. 2. Bohtlingh. 3. Bollar. 4. Prof. Hunfalvy.5. Vogul. இலக்கணங்களெல்லாம் நெருங்கிய தொடர்புடையன என்றும் ஹன்ஃபல்வி விளக்கியுள்ளார்.

பேரறிஞர் பாட், பிரடெரிக் முல்லர்[5] முதலிய பல மொழியியலார் சித்திய அல்லது துரானிய மொழிகள் ஒரு பொது மொழியிலிருந்து வந்தவை என்று உறுதியாகக் கூறமுடியாது என்று கருதுகின்றனர். பேரறிஞர் பிளாக்கும்[6] துரானிய மொழிகள் பலவும் ஒருபுடை ஒரே படித்தான வளர்ச்சியை அடைந்துள்ள ஒரே குழு மொழிகளோ அல்லது பல குழு மொழிகளோ ஆகும்” எனக் கருதுகின்றனர். எனினும் பொதுப்பட நோக்க, கஸ்த்ரேன்[7] முதலிய அறிஞர் கூறுகின்றபடி அவற்றின் ஒற்றுமைகள் மொழிக்கு இன்றியமையாதவையாகவும், பலவாகவும் இருக்கிறபடியால் அவற்றுள் ஏற்படும் தொடக்கப் பொதுமையை, அஃதாவது ஒரே முதன்மொழியினின்று அவை தொடங்கியிருக்க வேண்டும் என்ற முடிவை, ஏற்காதிருக்க முடியாது. இம்மொழிகளின் சொல் ஒற்றுமைகளும் வடிவ ஒற்றுமைகளும் ஆரிய செமிக்கிய இனங்களிற் காணப்படும் ஒற்றுமையினின்றும் வேறுபட்டவை யாயினும், தற்செயலாய் ஏற்படக் கூடியவை அல்ல, ஒரே முதன்மொழியிலிருந்து ஏற்பட்டவையாவே இருக்க வேண்டும் என்பது தெளிவு” என்பர் அறிஞர் மாக்ஸ்மூலரும், மேலும் நெடுநாள் பிரிந்தியங்கிய அடுக்கியல் மொழிகளுள், மொழியியற்கையின் அடிப்படைப் பகுதிகள் "அல்லது மாறுபாடு செய்யமுடியாத சொல் வகைகளான இடப்பெயர்கள், எண்ணுப் பெயர்கள், உருபுகள் போன்றவற்றைத் தவிர வேறு எத்தகைய ஒற்றுமைகளையும் நாம் எதிர்பார்க்க முடியாது. மேற்படையான பொருள் கொண்ட சொற்களுள் வேற்றுமை இருப்பதைவிட, ஒற் றுமை யிருப்பதைக் தான் நாம் அருமையாய்க் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலே திராவிட மொழிகள் வடமொழியினின்றும் வேறுபட்டவை என்பதற்குக் காட்டிய அக்காரணங்களையே அவை சிக்கிய இனங்களுடன் ஒன்றுபட்டவை என்பதற்கும் காட்டலாகும். சிக்கிய இனத்துட்பட்ட மொழிகள் அனைத்தும் ஒரே இனம் என்பதையும் அக் காரணங்களே காட்டும். அவற்றின் விளக்கத்தைக் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலுங்கூட அவை தொடர்பு என்பது ஐயமறத் தெளிவாகும். சில கூறுகளில் மட்டும் திராவிட மொழிகள் இந்து - ஐரோப்பிய மொழிகளை ஒட் டியவையாய்க் காணப்படுகின்றன; அஃதாவது ஒரளவுக்கு, ' அடுக்கியல் மொழியாய் இருப்பதிலிருந்து முன்னேறி (இந்து-ஐரோப்பிய மொழிகளைப் போல) ச் சிதைவியல்' மொழிகள் ஆகியுள்ளன. வேற்றுமையிலும் வினைத்திரிபிலும் பயன்படும் துணைச் சொற்களிற் பல தனி மொழியாக வழக்காறற்றுப்போயின. ஆனல் இஃதொன்றை முன்னிட்டு, திராவிட மொழிகளைச் சித்திய இனத்திலிருந்து பிரிக்க வேண்டியதில்லை; ஏனெனில் இத்துணைச்சொற்கள் சிற்சில இடங்களில் முற்றிலும் உருபுகள் அல்லது விகுதிகளாகக் குறைந்துவிட்டனவாயினும், சொற்களின் பகுதிகளிலிருந்து இவை எப்பொழுதும் பிரிக்கப்படக் கூடியனவாகவே இருந்துவருகின்றன; இந்து-ஐரோப்பிய மொழிகளிற் போன்று இவை பகுதியுடன் ஒன்றுபட்டு ஒரே மொழியின் கூறாய்விடவில்லை. இந்து - ஐரோப்பிய மொழிகளில் இவை அங்ஙனம் கலந்து விட்டபடியால் பகுதி எது, விகுதி எது என்று பிரிப்பது கூட அரிதாய் னவிடுகிறது. அதனேடு, துருக்கியம், பின்னியம், ஹங்கேரி

1. Inflexional. M யம், ஜப்பானியம் முதலிய மொழிகள் அனைத்தும் திராவிட மொழியைவிடச் "சிதைவியல்" துறையில் மேம்பட்டிருப்பினும், அக்காரணத்தால் சித்திய இனத்திலிருந்து விலக்கப்படவில்லை என்பதையும் ஒர்தல் வேண்டும்.

மொழியியலில் சீனத்தின் இடம்” என்ற நூலில் எட்கின்ஸ் சிக்கிய இனத்தின் ஒருமை, அவற்றுடன் திராவிட மொழிகளின் தொடர்பு ஆகிய கொள்கைகளைப் பெரிதும் ஏற்றுக் கொள்ளுகின்றார். அவர் காட்டும் பல தற்செயலான, நுணுக்கமான ஒற்றுமைகள் ஆழ்ந்து ஆராயுமளவில் நிலைநிற்கா. ஆயினும் பொதுப்படக் கூறுமளவில் இத்துறையில் ஒருவர் ஆராயுந்தோறும் திராவிட மொழிகள் மங்கோலிய மொழிகள் ஆகிய இரண்டும் ஒருவாறு ஒருமைப்பாடுடையன என்பதைக் காண்பர். திராவிட சீன மொழிகளிடை ஒற்றுமைகள் மிகுதி எனக் கூற முடியாது. எட்கின்ஸ் சித்திய இனம்மட்டுமன்று, ஆசிய ஐரோப்பிய மொழிகள் அனைத்துமே ஒரே முதன்மொழியின் வகைத் திரிபுகள் ஆகும் ” என்கிறார். இதுவரை மனித வகுப்பின் மொழிகளை அறிஞர் ஆராய்ந்த அளவில் இக்கோட்பாடு பொருத்தமாகத் தோன்றினும் அறிவியல் முறைப்படி இது முற்றிலும் நிலைநாட்டப்பட இன்னும் நெடுநாள் செல்லக் கூடும். கடைசியாக, திராவிட மொழிகளின் அமைப்புகளை விளக்கச் சித்திய மொழியினத்தை ஒற்றுமைப்படுத்தி ஆராய்ந்த அறிவு எவ்வளவோ பயன்படுகிறது என்ற ஒரு செய்தியே அவற்றுள் சித்தியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கோர் அறிகுறியாகும். இதற்கு எடுத்துக் காட்டாகத் திராவிட மொழியிலுள்ள வினைச்சொற்களின் பெயரெச்சத்தின் அமைப்பை எடுத்துக்கொள்ளலாம். மங்கோலியம், மஞ்சு இவற்றில் இஃது எங்ஙனம் அமைந்துள்ளது என்பதை அறிந்தபின்னரே, திராவிட மொழிகளில் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதை எளிதில் அறியமுடிந்தது. அங்ஙனம் அறிந்த விளக்கத்தை இதுவரை யாரும் மறுக்கவோ அல்லது வேறு வகையில் விளக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திய இனச்சார்புக் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு சான்றுங் கிடைத்துள்ளது. அதுவே மேற்கு மீடியா அல்லது பாரஸீகத்தில் உள்ள பெஹிஸ்தன் அல்லது பகிஸ்தான் அட்டவணைகளின் மொழிபெயர்ப்புக்கள் ஆகும். இவ் அட்டவணைகள் டரயஸ் ஹிஸ்டாஸ்பஸ்" என்பவர் தம்மைப்பற்றிக் தாமே எழுதிய வரலாறு ஆகும். இவை பழம் பாரசீக மொழியிலும், பாபிலோனிய மொழியிலும், பாரஸீக, மீடியப் பேரரசிலுள்ள சித்திய மக்களும் அறியும் படியாக அவர்களது தாய்மொழியிலும் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொழிபெயர்ப்பு திராவிட சித்திய உறவை விளக்கும் வகையில் ஒரு புத்தொளியாய் விளங்குகின்றது. இவற்றின் இரண்டாம் தொகுதி தெளிவாகச் சித்தியச் சார்பானது என்று நாரிஸ்’ தமது கட்டுரையில் எழுதுகிறார். பேரறிஞர் ஆல்பர்ட் இம்மொழியைப் பேசிய மக்கள் மீடியரே என்று கூறுகிறார். ஆயினும் அவரும் இம்மொழி சித்திய அல்லது துரானியச் சார்பானதென்றே கொள்கிறார். இதனால், கி. மு.5-ம் நூற்றாண்டிலேயே பேசப்பட்ட ஒரு சிக்கிய இன மொழியுடன் திராவிட மொழிகளை ஒற்றுமைப்படுத்தும் ஒர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இம்மொழி பொதுப்படச் சித்திய இனச்சார்புடையதே. எனினும், அவற்றுட் சிறப்பாக உக்ரோபின்னிஷ் குழுவுடன் இன்னும் நெருங்கிய தொடர்புடையதாகவுங் காட்டப்படுகிறது. திராவிடமொழி

1. Western Media. 2. Darius Hystaspes, 3. Mr. Norris. 4. Journal of the Royal Asiatic Society Vol. XV. 5. Prof. Oppert. கள் இந்த, உக்ரோ - பின்னிஷ் மொழிகளைச் சிறப்பாக ஒத்திருக்கின்றன என்பது இங்கே கூறவேண்டியதொன்றாகும்.திராவிட மொழிகளுக்கும், இப் பெஹிஸ்தன் அட்டவணையின் மொழிக்கும் இடையே காணப்படும் ஒற்றுமைகள் வருமாறு : ---

(i) இவ் அட்டவணைகளில் ட் ட, ட, ண என்ற நா அடி அண்ண ஒலிகள் உள்ளன. இதே ஒலிகள் திராவிட மொழிகளிலும் உள்ளன. வடமொழியிலும் இவை உள்ளனவாயினும் (பிற ஆரிய மொழிகளுள் இல்லாமையை நோக்கக்) திராவிட மொழிகளைப் பின்பற்றி வடமொழியில் ஏற்பட்ட ஒலிகளே இவை என ஊகிக்கலாம். நாரிஸும் இக்கருத்தையே வெளியிட்டுள்ளார்.

(2) திராவிட மொழிகளுள் தமிழைப்போல, இவ் அட்டவணை மொழிகளுள் வல்லெழுத்துக்கள் மொழிமுதலில் வரும்பொழுதும் இரட்டித்த இடத்தும் வல்லொலி உடையவையாகவும், மொழி இடையே உயிர்களின் நடுவே வரும் பொழுது அண்மை அல்லது அரை அங்காப்பு ஒலியுடைய னவாகவும் ஒலிக்கின்றன.

(3) இவ்வட்டவணை மொழியின் ஆறும் வேற்றுமை உருபுகள் ன, னின, இன்ன என்பவையாகும். இவற்றிற்குச் சரியான திராவிட உருபுகள் தெலுங்கு னீ என்பதும், கோண்டு அல்லது பிராகுவி ன அ என்பவையும், தமிழ் இன் என்பதும் ஆகும்.

(4) அட்டவணைகளில் நான்காம் வேற்றுமை உருபு இக்கி அல்லது இக்க என்பதாகும். இதனையொக்க உருபுகள் தாத்தார்-துருக்கியக் குழுவிலும், உக்ரியன் இனத்திலும் உள. ஆனால் இதனை முற்றிலும் ஒத்திருப்பவை திராவிட உருபுகளாகிய கு, கி, க என்பவையாம். தமிழ், மலையாள மொழிகளில் இவ்வுருபுகள் இரட்டிக்கும்போது அவற்றின் முன் அல்லது சொல்லொலிச் சாரியையாக வருகின்றது. அட்டவணைகளில் உனக்கு என்னும் பொருளில் நினிக்க(நின் -இக்க) என்னும் சொல்லுடன் கன்னடம் நினகெ (நின்-அ-கெ) மலையாளம் நினக்கு (நின்-அ-க்கு) என்பவற்றை ஒப்பிட்டு நோக்குக.

(5) அட்டவணைகளிலுள்ள இடப்பெயர்களின் இரண்டாம் வேற்றுமை உருபு உன், இன், ன் என்பவையாம். இத்துடன் தெலுங்கு உருபு னு, னி என்பதையும், கன்னடம் அம், அன்னு (அன்ன்-உ) என்பதையும் ஒப்பிட்டு நோக்குக. (6) அட்டவணைகளில் வரும் எண்ணுப் பெயர்களில் எழுத்தில் எழுதிய பெயர் ஒன்று என்னும் பொருளில் வரும் கிர் என்ற சொல் மட்டுமேயாம். இஃது உண்மையில் பெயருளிச்சொல் வடிவத்திலேயே (அஃதாவது பண்புத் தொகையாகவே) எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தெலுங்கில் இவ்வடிவம் ஒக-என்பதும், தமிழில் ஒர்-என்பதும் ஆகும். கு-மொழியில் தமிழ் ஒரு என்பதற்குச் சரியான சொல் ர என்பதாம். இக் கு மொழியின் வடிவத்திற்கு அட்டவணையிலுள்ள பிறிதொரு வடிவமாகிய ர அல்லது இர்ர மிகவும் நெருங்கியதாகும்.

அட்டவணையில் எண்ணுப் பெயர்கள் பெயரடையாகும் பொழுது இம் என்ற சாரியையைக் கொள்ளுகின்றன. இது தமிழ் ஆம் என்பதையும் ஸாமோயியத் இம் என்பதையும் நினைவூட்டுகின்றது.

(7) திராவிட மொழிகளிலும், அட்டவணையிலும் முன்னிலைப் பெயர் ஒன்றே. இவை இரண்டிலும் எழுவாய் நீ; பிறவேற்றுமைக்கு முன்னைய முதல் வடிவு நின் என்பதாகும். தமக்குக் கீழ்ப்படியிலுள்ளவர்களை அழைக்க முன்னிலை ஒருமையையே வழங்கிவந்த காரணத்தால் இவ்வட்டவணைகளில் முன்னிலைப்பன்மை காணப்படவில்லை. (8) அட்டவணை மொழியிலும் திராவிட மொழிகளைப் போலவே பெயரெச்சம் இருக்கிறது.ஆனால் அதோடுகூடவே அதில் இணைப்பு இடப்பெயர் ஒன்றும் காணப்படுகிறது. ஆகும். இப்பகுதி பாரசீகத்தினின்றும் மொழிபெயர்க்கப்பட்டதாதலால் பாரசீகத்திலுள்ள இணைப்பு இடப்பெயரைத்தான் இங்கே புனைந்து உண்டுபண்ணியிருக்கவேண்டும் என்று நாரிஸ் கருதுகிறார். அட்டவணையின் பெயரெச்சம் உருவில் திராவிடப் பெயரெச்சத்தினின்றும் வேறுபட்டிருப்பினும் அதன் பொருளும் பயனும் திராவிட வழக்கை ஒத்தே இருக்கின்றன. இப்பெயரெச்சமே சிக்கிய இனச் சார்புடைய மொழிகள் அனைத்திற்கும் பொதுவான சிறப்புப் பண்பு எனக் கொள்ளலாம் போலும்!


(9) அட்டவணையின் ஏவல் எதிர்மறை முடிபு இன்னி, கோண்டில் இது மின்னி ஆகும்.

இவ்வொற்றுமைகள் நீங்கலாகப் பிறவேற்றுமைத் திரிபுகளில் பெஹிஸ்தன் அட்டவணையின் மொழி ஹங்கேரியம், மோர்டுவின் முதலிய பிற உக்ரிய மொழிகளை ஒத்திருக்கின்றது. ஆனால், இவ்வகைகளிலெல்லாம் திராவிட மொழிகள் வேறுபடுகின்றன. அவற்றின் வினைச்சொல்லாக்கம் சிக்கலற்றது. அவை பெரும்பாலும் காலங்காட்டும் இடைநிலைகளுடனும், அவற்றின்பின், பால், இடம் காட்ட அவற்றிற்குரிய இடப்பெயர்களின் திரிபுகளையே கொண்டும் விளங்குகின்றன். இவ்வகையில் வேற்றுமைகள் இருந்தும்கூட, மேற்கூறிய ஒற்றுமைகள் இன்றியமையாச் சிறப்புடையன ஆதலின், திராவிட மொழிகளுக்கும் சித்திய மொழிகளுக்கும் இடையிலுள்ள உறவு ஒருசிறிதேயாயினும் அஃது அடிப்படையானதே என்பதில் ஐயமிருக்க முடியாது. ஏனெனில், இவ்வளவு வேற்றுமைகளுக்கிடையிலும் இன்றியமையாத ஒற்

1. Relative Pronoun. 2. Mordvir றுமைகளும் காணக் கிடக்கின்றனவாதலின். இவ்வொற்றுமைகளிலிருந்து பெறப்படுவனயாவை யெனில், திராவிடர் வரலாற்றுக் காலங்களுக்கு நெடுநாள் முன்னரே இந்நாட்டிலேயே இருந்தவர்கள் என்பதும், அவர்களும் உலக மக்கட் குழுவினர் அனைவருக்கும் முதற் பிறப்பிடமாகக் கருதப்படும் நடு ஆசியாவினின்றே இங்கு வந்தவர்கள் என்பதுமே யாம். முதலில் ஆரியரிடமிருந்தும், பின் உக்ரோ-துரானியரிடமிருந்தும் பிரிந்து இவர்கள் இங்கியாவை நோக்கி வந்திருக்கவேண்டும் என்பதும், வரும் வழியில் பலூச்சிஸ்தானக்கில் ஒரு பகுதியினரைக் குடியேறவிட்டு வங்திருக்க வேண்டும் என்பதும் எளிதில் ஊகிக்கப்படும்.

இங்ஙனம் இலக்கண அமைப்பு முதலிய பல ஒற்றுமைப் பண்புகளின் மூலம் திராவிட மொழிகள் சித்தியக் சார்புடையவை என்று கொள்ளப்படினும், அவை இந்து - ஐரோப்பிய மொழியினச் சார்பும் உடையவையே என்பது வியக்கத்தக்க சில ஒப்புமைகளால் உய்த்துணரப்படும். அவற்றின் சித்தியத் தொடர்புகூடத் தனிப்படத் துருக்கியக் குழுவுடனே, உக்ரிய, மங்கோலிய, துங்கூஸிய மொழிகளுடனே அன்று ; அம்மொழிகள் அனைத்தும் தம்முள் எவ்வளவோ வேற்றுமையுடையன ; ஆயினும் அவையனைத்திற்கும், தாயாயுள்ள ஒரு பேரின மொழியுடனேயே திராவிட மொழியினங்கள் தொடர்புடையவை யாம். இவற்றுள் திராவிடத்திற்கு மிகவும் அண்மையுடையதெனக் கொள்ளக்கூடியது பின்னிஷ் அல்லது உக்ரியமே. ஒஸ்கியக்குடனும் சில சிறப்பான உறவுகள் உள்ளன. இலக்கண ஒப்புமை,சொல் தொகுதி ஒப்புமை ஆகியவற்றின் மூலமாகமட்டும் ஆராய்ந்து கண்ட இம்முடிபு பெஹிஸ்தன் அட்டவணைகளின் வெளியிட்டால் பெரிதும் உறுதியடைவது காண்க. இதனால் மீடோ-பாரசீகரது படையெடுப்பிற்கு

முன் நடு ஆசியாவில் குடியிருந்த மக்கள் துருக்கிய அல்லது மங்கோலியக் குழுவினர் அல்லர், உக்ரியக் குழுவினரே என்பது விளங்கும். வெப்ப மண்டலத்துள் இருக்கும் ரொவிடக் குழு எங்கே, வட துருவப் பக்கத்திலிருக்கும் பின்னியர், ஒஸ்கியக்கர், உக்ரியர் எங்கே! இவர்களிடையே எத்தைகைய தொடர்பு?

கிராவிட மொழிகளைச் சித்தியச் சார்புடையவை என்று கணித்தற்கான தெளிவுகளை ஆராய்கையில் நினைவில் வைக்க வேண்டியதொன்றுண்டு. அஃதாவது, ஒருபுறம் சித்திய இன மொழிகளின் அடிப்படையான தொடக்க இயல்’ பண்புகள் தெளிவானவுருவுடையவை ஆக இருப்பினும், இன்னொருபுறம் சொல் தொகுதியிலும், வேறு பல சிறு குறிப்புக்களிலும் ஒன்றுக்கொன்று மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை உடையவையாயிருக்கின்றன என்பதே. உண்மையில், இந்து - ஐரோப்பிய இன மொழிகள் ஒன்றுக்கு ஒன்று வேற்றுமைப்படுவதைவிட, சித்திய மொழிகள் ஒன்றுக்கொன்று எத்தனையோ மடங்கு மிகுந்த வேற்றுமையுடையன என்று கூறுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்து - ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் எண்களின் பெயர்கள் ஒத்திருக்கின்றன என்று சொன்னாற் போதாது, (வடமொழி ஒன்று என்னும் பொருள்கொண்ட எக என்பது நீங்கலாக மற்றவை அனைத்தும்) ஒரே வடிவுடையவையாகவே இருக்கின்றன என்றுங் கூறுதல் வேண்டும். இதற்கு நேர்மாறாக, சித்திய இன மொழிகளில் அனைத்திற்கும் பொதுவான ஒற்றுமைகள் அருகியிருக்கின்றன என்று சொன்னும் போதாது; ஏதேனும் இரண்டு மொழிகளுக்குப் பொதுவான எண்களின் பெயர்கள்கூட மிக மாறுபட்டே யிருக்கின்றன என்றுங் கூறுதல் வேண்டும். இவ்வேற்றுமைகளின் மிகுதிப்பாட்டை நோக்கின், இந்தச் சித்திய இனம் இந்து - ஐரோப்பிய இனத்தைப் போல் ஒரு தனி இனம் என்று சொல்வதைவிடப் பல இனங்களை உட்கொண்டதோர் பேரினம் என்று சொல்வதே சாலும். இப்பேரினத்துட்பட்ட குழுக்களின் ஒருமைப்பாடு நுணுக்கமான ஒற்றுமைகளால் நிறுவக்கூடியதன்று, பெரும்போக்கான வடிவு அல்லது அமைப்பு ஒற்றுமைகளினாலேயே நிறுவப்படும். எனவே, இந்து ஐரோப்பிய இனத்துட்பட்ட மொழிகளாகிய வடமொழி, ஸெந்து (கீழப் பழம் பாரஸீகம்), பழம்பாரஸீகம், கிரேக்கம் இலத்தீனம், காதிக் லித்துவேனியம், ஸ்லவோனியம், கெல்த்தியம் முதலிய ஒவ்வொன்றும் ஓரினத்துட்பட்ட தனி மொழிகளேயாம். ஆனால் சித்தியப் பேரினத்திலே இவற்றிலும் மிகுந்த வேற்றுமைகளையுடைய சிற்றின மொழிகள் ஐந்தாறுக்கு மேற்பட்டுள்ளன. இவ்வுட்பிரிவினங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட இந்து - ஐரோப்பிய மொழிகளில் எத்தனைத் தனி மொழிகள் உண்டோ அத்தனைத் தனி மொழிகள் உள்ளன. இவைபோக வகைப்படுத்தி இந்நாள் வரை இனமாகச் சேர்க்க முடியாத நிலையுடைய இருபது முப்பது தனிமொழிகள் கூட உள்ளன.

இந்து - ஐரோப்பிய இனத்திற்கும் சித்தியப் பேரினத்திற்கும் இடையில் உள்ள இப்பெரு வேற்றுமைக்குக் காரணம் முதன்முதற் கொண்டே முன்னைய இனத்தவர் உயர் அறிவும் நாகரிகமும் படைத்திருந்தமையும், அவர்கள் மொழிகள் இன்னும் முந்திய நாள் முதற்கொண்டே திருத்தமுற்று முதற் சொற்களும் அமைதிகளும் சிதையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளமையும் தான். சித்திய இனத்தவர் நாடோடிகளாய்த் திரிபவராயிருந்தமையும், ஆரியர் ஒழுங்கான குடிவாழ்க்கை உடையவராயிருந்தமையும் இதற்கு அடிப்படைத் தூண்டுதல்களாயிருந்திருக்க வேண்டும். காரணம் எதுவாயினும் சரி, சித்திய மொழிகளின் இன உறவுகளை ஆராயும் வகையில் இச்செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளல் வேண்டும். நெடுநாள் பிரிக்கப்பட்ட சித்திய இனமொழிகளிடையே அதே இயல்புடைய இந்து - ஐரோப்பிய - மொழிகளில் காணப்படும் நுணுக்கமான ஒற்றுமைகளை. எதிர்பார்க்க முடியாது. திருந்தா மொழிகளிடையே, ஒரு மொழியின் வகைத்திரிபுகளிடைக்கூட மிக விரைவான மாறுதல்கள் ஏற்பட்டு, மாறுபாடும் மிகுதியாய்விட்டதற்கான எடுத்துக் காட்டுகளைப் பேரறிஞர் மாக்ஸ்மூலர் தமது "மொழியியல் சொற்பொழிவுகளில்” குறிப்பிடுகிறார். இதே மாக்ஸ்மூலருக்கு வரைந்த கடிதமொன்றில் பாட்டிஸன் பாதிரியாரும் ' ஒன்றினையொன்று அடுத்துள்ள தீவுகளிரண்டின் மொழிகள் சொல் தொகுதியில் முற்றிலும் வேறுபட்டும், அமைப்பு ஒன்றில் மட்டுமே ஒன்றுபட்டும் காணப்படுவது இயல்பு' என்று இதனேடொப்பக் கூறுதல் காண்க.

ஒரு தனிமொழிக்கு ஒரு மொழியினத்துடன் மூன்று வகையான உறவுமுறை இருக்க முடியும். (1) நேரான கால்வழி முறை (2) உடனியங்குங் துணைமொழி முறை (3) அவ்வினத்துட் சாரும் சார்புமுறை. இவற்றுள் மூன்ரும் உறவு முறையையே திராவிட மொழிகள் சித்திய மொழியினத்துடன் கொண்டுள்ளனவாகக் கூறலாம். எனினும், திராவிட மொழியாராய்ச்சியாளர்கள் இதனை ஒப்புக்கொண்டதாகக் கூற முடியாது. திராவிட மொழிகள் பெரிதும் இந்து-ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவையே என்று திராவிட மொழியாராய்ச்சிப் பேரறிஞர் டாக்டர் போப் கருதுகிறர். தமிழ்க் கைச் சுவடிஎன்னும் தம் நூலின் முன்னுரையில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.


1. Tamil Hand-Book. 'தென்னிந்திய மொழிகளை எவ்வளவுக்கெவ்வளவு ஆழ்ந்து படிக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை வடமொழித் தொடர்புடையனவெனவும், இந்து-ஐரோப்பிய மொழியினத்துடன் மிகவும் நெருங்கிய பண்டைத் தொடர்பு உடையனவெனவும் காணலாம். ஆனால், அவை வெறும் பாகதங்கள் என்றே, வடமொழிச் சிதைவுகள் என்றே கூறிவிட முடியாது. அவை இந்து-ஐரோப்பிய மொழியினத்துள் இடம்பெற வேண்டியனவே என்றும், வடமொழிக்கு இணையான வேறொரு துணைமொழியின் சிதைந்த கூறுகளே அவை என்றும், அவையும் வடமொழியும் ஒரே பண்டை மூல மொழியின் கிளைகள் என்றும் யாம் எப்பொழுதும் கருதி வந்துளோம். இந்து-ஐரோப்பிய மொழியினத்தைச் சேர்ந்த கிரேக்கம், காதிக், பெர்ஸியன் முதலிய மொழிகளுடன் அவை நெருங்கிய தொடர்புடையன என்பதற்கு உறுதியான சான்றுகள் பல உள ; அத்தகைய தொடர்பு வடமொழிக்கு இருந்ததாகச் சொல்வதற்கில்லை”. 'மலைச்சொற்பொழிவு ' எனும் விவிலியப் பகுதியைத் திராவிடமொழிகள் நான்கிலும் மொழிபெயர்த்துத் தந்துள்ள தம் நூலின் முன்னுரையில், போப் பின்வருமாறு எழுதியுள்ளார் : இந்தத் திராவிட மொழிகளுக்கும் கெல்திக் தெயுத்தோனியம் ஆகிய இரு மொழிகளுக்கும் உள்ள அடிப்படையான ஆழ்ந்த உறவுகளை மொழியியலார் கூர்ந்து நோக்குதல் வேண்டும். இடமும் காலமும் வாய்ப்பின் இவ்வொப்புமைகளை விரித்தெழுதக் கூடும். இந்நூலின் அடுத்த பதிப்பிலோ வேறு நூலிலோ இதுபற்றி மேல் எழுதக் கருதியுள்ளோம். முழு ஒப்புமை அகர வரிசை ஒன்றாலன்றி வேறெதனாலும் இம் மொழிகளின் இன உறவை விளக்குதலரிது.” கடைசியாக, போப்

1. Gothic. 2. The Sermon on the Mount. 3. Celtic. 4. Teutonic. கூறியது: 'துதமொழி இலக்கணச் சுருக்கத்தின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்: பேரறிஞர் கால்டுவெலுடன் யாம் பெரிதும் ஒத்த கருத்துடையோம் ஆயினும், திராவிட மொழிகளுக்கும், கெல்த்திய மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவு இன்னும் நன்கு ஆராயக்கிடப்பதொன்றால் எண்ணுகின்றோம்’ என்பதே. இத்துறை ஆராய்ச்சி மிகவும் இன்றியமையாததே என்பதில் ஐயமில்லை. போப் இந்து - ஐரோப்பிய மொழியுடனே ஒற்றுமை, உறவு, இனஒற்றுமை என்று கூறுவனவெல்லாம் எமக்கு உடன்பாடே. இந்நூலின் முதற்பதிப்பில் அவற்றை யாமே எடுத்துக்காட்டியும் உள்ளேம். ஆனால், அவ் எடுத்துக்காட்டுக்களிலிருந்து போப் கொண்ட முடிபு எம் முடிவான முடியுடன் வேறுபடுகிறது. எமது கோட்பாடு சித்திய, இந்து-ஐரோப்பிய உறவுகள் இரண்டற்கும் இடந்தருபவையாக இருப்பினும், இந்து-ஐரோப்பிய இனத்தைவிடச் சித்திய இனமே திராவிடக் குழுவோடு நெருங்கிய உயிர்நிலையான தொடர்பு உடையது என்பதாகும். கெல்த்திய உறவுகளைப்பற்றி எடுத்துக்கொண்டால், இந்து - ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இம்மொழியினமே பொதுப்படச் சித்திய இனத்துடனும், சிறப்பாக பின்னியக் குழுவுடனும் மிக நெருங்கிய தொடர்புடையவையாகத் தோன்றுகிறது. கெல்த்தியர் ஐரோப்பாவுக்கு வரும்போது அங்கிருந்த முன் குடிகள் கெல்த்திக் மொழியையும் பின்னிஷ் மொழியையும் பேசி வந்தார்களோ என்பது ஆராயத்தக்கது. மேலும், கெல்க்கிய உறவுகள் என்று கூறப்படும் உறவுகள் சிறப்பாகக் கெல்த்திய உறவுகள் தானா அல்லது உண்மையில் சித்திய உறவுகள் தானா என்பதும் ஒப்பிட்டு ஆராயத்தக்கதொன்றாம்.


1. Outline of the Grammar of the Tuda, Language. இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்திலேயே மேற்குறிப்பிட்ட கிராவிட-இந்து-ஐரோப்பிய ஒற்றுமைகள் ஒப்புக் கொள்ளப்பெற்றுள்ளன. அதற்காகக் குறித்துள்ள எடுத்துக் காட்டுகளில் சில ஒற்றுமைகள் அடிப்படையானவை அல்ல; ஆதலால் ஆழ்ந்த நோக்கும் அளவில் மறைந்துவிடுகின்றன. (தமிழ் ஒன்று அல்லது ஒண்ணு; இலத்தினம் ஊனுஸ்; தமிழ் அஞ்சு ; வடமொழி பஞ்ச(ன்) ; தமிழ் எட்டு ; வடமொழி அஷ்ட(ன்) என்பன போல்பவை). இவற்றைப் புறக்கணித்து விட்டுப் பார்த்தாலுங்கூடத் திராவிட மொழிகளின் இலக்கண அமைகிகளிற் பலவும், முதற் சொற்களிற் பலவும் இந்து-ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்புமையுடையவையாய் இருக்கின்றன. ஆயினும், உயிர்நிலையான அமைப்பு முழுவதும் ஐயமறச் சிக்கியச் சார்புடையதாதலால் சித்திய இன உறவே வலியுறுத்தப்பட்டது. எபிரேய முதற் சொற்களிற் பல வடமொழி முதற்சொற்களுடன் தொடர்புடையவை என்று காட்டப்படுகின்றமை கருகி, எபிரேய மொழியைச் செமித்கிய இனத்தினின்றும் பிரித்து இந்து - ஐரோப்பிய மொழியாகக் கணிக்காததுபோல, வடமொழி, கிரேக்கம், காகிக், கெல்த்திக், பாரஸீகம் முதலிய பல மொழிகளுடன் வியக்கத் தகும் ஒற்றுமைகள் கிராவிட மொழிகளிற் காணப்படினும் கிராவிட மொழிகளைச் சித்திய இனத்திலிருந்தும் பிரிக்க வேண்டியதில்லை. "கினிகோ. ஆர்யக" என்ற நூலில்[8] பேரறிஞர் ஷ்லெஜெல் ஆரிய சீன ஒப்புமைகளைச் சுட்டிக்காட்டி ஆரிய சீன மொழிகள் தம்முள் இன உறவுடையன என்று விளக்க முயல்கிறார். அவர் கூறிய உறவு உறுதிப்பட்டுவிடினுங்கூடச் சீனம் ஆரியமொழி என்று ஆய்விடமாட்டாது. இரு மொழிகளிலும் மிகப் பழமையான சில முதற் சொற்கள் உள்ளன என்றுதான் முடிவு செய்யப்படும். மேலும் சீனமொழி மட்டுமே யன்றி, வடமொழியும், எபிரேயமுங்கூட முதன்முதலில் ஒரசை மொழியாய் இருந்தன என்று ஆராய்ச்சியால் தெரியவருகின்றது. பெரும்பாலும் திராவிட முதற்சொற்களும் அங்ஙனம் ஓரசைச் சொற்களே என்பது இவ்வாராய்ச்சியால் புலனாகும். இவ்வகையில் பேரறிஞர் ப்ளிக் என்பார் ஆரிய மொழிகள் மிகப் பழைமையானதொரு காலத்தில், திராவிட மொழி அளின் காக்குதல்களுக்கு உட்பட்டிருக்கவேண்டும்” எனக் கொள்கிறார். அவர் கூறுவதாவது : -"பால் வகுப்புடைய மொழிகளுள் ஆரிய இனம் பொதுப்பால் என ஒரு பால் உடைமையால் வேறு பிரிக்கப்படுகிறது. இன்றைய ஆரிய மொழிகளுள் இப்பொதுப்பால் திருந்திய முறையில் வழங்குவது ஆங்கிலம் ஒன்றிலேதான். ஆனால், பழைய மொழிகளுள் ஆங்கிலத்திற்கு ஒப்பத் திருத்தமாக இதனைத் திராவிட மொழிக் குழுவே வழங்கிவந்துள்ளது. ஆங்கிலமும் திராவிட மொழிகளும் இப்பாலை வழங்கும் இடங்கள், எல்லை ஆகியவற்றுள் முற்றிலும் ஒத்திருக்கின்றன. (ஆண், பெண், பொது என்ற) முப்பால் பாகுபட்டை உடைய குழுக்கள் இவை இரண்டுமே என்பதை நோக்க இவை உறவற்றவை என்று கொள்ளுதல் இயல்பாகத் தோற்றவில்லை. பால் வகுப்பையுடைய ஆரிய இனத்துடன் திராவிட மொழிகள் இதுகாறும் தொடர்புபடுத்தப்படவில்லையாயினும், ஆரிய மொழிகள் உரு அடையாமல் வளர்ந்துவந்த காலத்தில் அவற்றில் திராவிடத்தாக்கு ஏற்பட்டதனாலேயே இவ்வொற்றுமையும் பிற ஒற்றுமைகளும் ஏற்பட்டிருக்கலாம் என்று கூற இடமுண்டு” என்பதே. ஆராய்ச்சி எட்டுமளவும் பார்த்தாலும் மிகப் பழமையான காலத்தில்கூடத் திராவிட மொழிகளில் இப்பொதுப்பால் ஒருமைப் (ஒன்


1. Dr.Bleek றன்பால்) பெயர் இருந்ததாகக் காணப்படுகிறது. ஆனால் வினைச்சொல்லில் பால் பாகுபாடு ஏற்பட்டது பிற்காலத்திலே என்றுதான் எண்ணவேண்டும். இந்தியாவுக்குள் திராவிடர் வருங்கால் அவர்கள் மொழியின் வினைச்சொல்லில் விகுதியே இருந்திருக்க இடமில்லை; எனவே, பால் பாகுபாடும் இருந்திருக்க முடியாது. உலகில் வேறெந்த மொழிகளையும் விடத் திராவிடமொழி வினைச்சொற்களிலேயே பால் பாகுபாடு நிறைவுடையதாக இருக்கின்றது என்பது பின் தெளிவுறுத்தப்படும். இத்தகைய பால் பாகுபாட்டு வளர்ச்சி வடமொழிச் சார்பினால் உண்டான தொன்றாகாது ; அதற்கு நேர்மாறாகவே உண்டாயிருத்தல் வேண்டும்.

திராவிட மொழிகளில் வடமொழியுடனும் இந்து, ஐரோப்பிய மொழிகளுடனும் தொடர்புடைய சில வேர்ச்சொற்களும், சொல் வடிவங்களும் காணப்படுகின்றன என்று பொதுப்பட மேற்கூறப்பட்டது.தவறான சில கருத்து முடிபுகள் அக்கூற்றிலிருந்து எழக்கூடுமாதலின், அவற்றை விலக்குதல் இன்றியமையாததாகும். ஆரியர்களும் திராவிடர்களும் பல நூற்றாண்டுகள் கலந்து உறைந்து வந்தமையால், வடமொழியிலிருந்து திராவிடமொழிகள் பல சொற்களைக் கடன் வாங்கியுள்ளன. எனினும், இத்தகைய சொற்களைக் கொண்டு மேற்கூறிய மொழியொப்புமைக் கருத்தை ஈண்டு யாம் விளக்க முயலவில்லை. இரு மொழிகளின் அடிப்படையான மூலச் சொற்களிலும், சொல்லமைப்பிலும் காணப்படும் ஒற்றுமைகளே யாம் எடுத்துக் கொண்டனவாகும். தம்மையடுத்து வழங்கிவந்த வளமிக்க பிறமொழிகளிலிருந்து திராவிட மொழிகள் பல சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே; ஆனால் அதுபோலவே வடமொழியும் சிற்சில வகைகளில் திராவிடமொழிச் சொற்களைக் கடன் வாங்கிப் பயன்படுத்தப் பின் வாங்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளுதல் வேண்டும். பொதுவாக ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழியில் இவ்வாறு வந்தேறியுள்ள சொற்களைப் பிரித்தறிதல் அரிதன்று. எடுத்துக்கொண்ட பல சொற்களும், சொல்லமைப்புகளும் வடமொழியோடு மட்டுமன்றி இந்து-ஐரோப்பிய மொழியினத்துடனும் ஒற்றுமையுடையனவாகக் காணப்பெறுகின்றன. இன்னுங் கூறப்போனால் வடமொழியிற் காணப்பெறா ஒற்றுமைகள் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் காணப்பெறுகின்றன. வடமொழியில் காணப்பெறும் ஒற்றுமைகளும் சிற்சில இடங்களில், திருந்திய அமைப்புடைய பிற்கால வடமொழியிலன்றிப் (ஸம்ஸ்க்ருதம்) பண்டைய திருந்தாத வடமொழியிலேயேயாகும்.

திராவிட மொழிகளிற் காணப்பெறும் இத்தகைய கொடுக்கல் வாங்கல் சார்பற்ற அடிப்படையான ஒற்றுமைகளிற் சில கீழே தரப்படுகின்றன :-

(1) கிரேக்க மொழியிற்போல் னகரம் உடம்படு மெய்யாகப் பயன்படுதல்.

(2) மூன்றும் இடத்திலும் (படர்க்கையிலும்), வினைச்சொல்லிலும் பால்பாகுபாடு இருத்தல்; சிறப்பாகப் பொதுப்பால் (ஒன்றன்பால்) என ஒன்றிருத்தல்.

(3) படர்க்கையொருமை ஒன்றன்பாற் பெயரின் விகுதி 'த்' ஆக இருத்தல்.

(4) இலத்தீனைப் போன்று பலவின்பால் விகுதி அகரமாயிருத்தல்.

(5) தொலைச் சுட்டு அகரமாகவும், அண்மைச்சுட்டு இகரமாகவும் இருத்தல்.

(6) பாரஸீக மொழி போன்று இறந்தகால மறிவிக்கப் பெரும்பாலும் 'த்' என்ற அடையை (இடைநிலையை)ப் பயன்படுத்தல். (1) பகுதியின் ஒரு கூற்றை இரட்டித்து இறந்தகாலம் உணர்த்தல்.

(s) வினைப்பகுதியின் முதலுயிர் நீண்டு தொழிற் பெயராதல்.

மேற்காட்டிய சில பகுதிகளாலேயே இந்து-ஐரோப்பிய-திராவிடத் தொடர்பு ஒன்று உள்ளது என்பது புலப்படும். அன்றியும், திராவிட மொழிகளுக்கு அருகிற் பன்னெடுநாளாய்ப் பயின்றுவந்த மொழி வடமொழியே யாயினும், திராவிட முதற்சொற்களிற் பல வடமொழி அல்லது கீழே இந்து - ஐரோப்பியக் குழுவைவிட மேல ஐரோப்பியக் குழுவையே சார்ந்தவையாயுள்ளன என்ற கூற்றின் உண்மையும் விளங்கும். எனவே, திராவிட மொழியைச் சித்திய இனச் சார்புடையதென வகுத்துக் கொள்வதே சரியாயினும், அந்தச் சித்திய இனத்திலுள்ள மற்றெல்லா மொழிகளையும் விட இந்து-ஐரோப்பிய மொழிகளுடன் மிகப் பலமான, பழைமையான அரிய ஒப்புமைகளையுடைய குழு திராவிடக் குழுவே என்பது தெளிவாகும். இக்குழுவை ஆரிய சித்திய இனங்களுக்கு இடைப்பட்ட குழு என்று சொல்லாமற் போனலுங்கூட, இந்து-ஐரோப்பிய இனத்துடன் உறவுடைய சிக்கிய உறுப்பு மொழி என்றேனும் கூறத் தடையில்லை. இந்த இரண்டு இனங்களின் மிகப் பழைமையான ஒருமைப்பாட்டுக்கும் இதுவே சான்றாகும். இக்கொள்கை சரியாயின், திராவிட மொழிகளிலுள்ள இந்து - ஐரோப்பிய ஒற்றுமைகள் நம்மை வரலாற்றுக் காலங்கள் அனைத்திற்கும் முற்பட்டகாலத்திற்குக் கொண்டு செல்லுகின்றன ; அதுமட்டுமோ? சமயக் கதைகளின் தோற்ற காலத்ற்கும் முந்தியும்,இந்து-ஐரோப்பிய இனத்தார் மேலேஇனம், கீழைஇனம் எனப் பிரிவதற்கும் முந்தியும், இந்து - ஐரோப்பிய இனத்தானும், இன்று சித்தியச் சார்புடையவை என்று கூறப்படும் எல்லா மொழிகளுக்கும் தாயகமான முதற் சித்திய மொழியினத்துடன் ஒன்றுபட்டிருந்த காலத்திற்கு முக்கியும் கொண்டுசெல்லுங் தகையவாயிருக்கின்றன.

திராவிட மொழிகளில், சிறப்பாகத் தமிழில், ஒருசில செமித்திய ஒற்றுமைகள் காணப்படுகின்றமை வியக்கத்தக்கதே. அவற்றுள்ளும் சில ஒற்றுமைகள் இவ்விரண்டில் மட்டுமன்றி, எபிரேயத்திலும், இந்து-ஐரோப்பிய மொழிகளிலும் இருக்கின்றன. இத்தகைய இடங்களில் எபிரேய உருவே இந்து-ஐரோப்பிய உருவினும் திராவிட மொழிகளுக்கு அண்மையதா யிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, தமிழில் அவா (பெயர்ச்சொல்); ஆவல் (தொழிற் பெயர்); இவற்றை இலத்தீனம் அவெ-ஒ (வினைப்பகுதி), வடமொழி அவ் முதலியவை அண்டியே இருக்கின்றன. ஆயினும், எபிரேயம் அவ்வாஹ் (பெயர்ச்சொல்), ஆவஹ் (வினை) என்ற இரண்டும் மிகவும் அண்மையுடையவாயிருக்கின்றமை காண்க! இங்ஙனம் திராவிடம் உள்ளடங்கிய எல்லா இனங்களுக்கும் பொதுவான ஒற்றுமைகள் ஒருபுறம் இருக்க, திராவிடம், எபிரேயம் இவற்றிற்கே சிறப்பாய், பிற மொழிகள் எவற்றிற்கும் உரியவல்லாத ஒப்புமைப் பண்புகளும் சில இருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட தமிழிலுள்ள செமித்திய ஒற்றுமைகள் இந்து-ஐரோப்பிய ஒற்றுமைகளைப் போலச் சிறந்தவையுமல்ல, பலவுமல்ல; ஆனால், இம் மூன்றினங்களிலுங் காணப்பெறும் ஒற்றுமைகளுடனும், எபிரேயத்துடன் மிகவும் நெருங்கியவாய்க் காணப்பெறும் பண்புகளுடனும் சேர்ந்து, அவை திராவிட மொழியின் பண்டைத் தொன்மையைப் பற்றி ஆராயும் அறிஞருக்கு மிகவும் பயன்தரத்தக்கவை. இத்தகைய ஒப்புமைகளை இங்கே குறிப்பது திராவிடத்திற்கும் எபிரேயத்திற்கும் இவற்றிற்கும் தொடர்பு உண்டென்று காட்டவன்று; பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்” என்ற உண்மையைக் கருத்திற் கொண்டு இத்துறைகளில் எல்லாம் ஆராய்ச்சியைச் செலுத்தாவிடினும், பிறரது ஆராய்ச்சிக்காக இத்தகைய முடிவுபடுத்தப்படாக சிதறிய ஒப்புமைகளை அப்படியே எடுத்துக் காட்டவேயாம். ஆனால், இந்து-ஐரோப்பிய-திராவிட ஒப்புமைகள் மொழியியலின் உயிர்நிலையை ஒட்டியவையாதலின் அவற்றைப் பழைமையான கூட்டுறவில்லை பெறப்பட்டவை என்று கூறிவிட முடியாது. செமித்திய ஒற்றுமைகளோ இங்ஙனமன்றி இன ஒற்றுமையை இன்றியன்மயாதவையாக வேண்டக்கூடியவையல்ல ; தற்செயலாய் ஏற்பட்டவை என்றே, அல்லது ஏதேனும் ஒருகாலத்தில் பண்டைத் திராவிடர்கள் செமித்திய இனத்தாருடன் அடுத்து வாழ்ந்தமையால் ஏற்பட்டவை (இது எளிதில் இருந்திருக்கக் கூடியதே) என்றே கூறிவிடலாம்.

இனி, திராவிட மொழிகளின் இடப்பெயர்கள் தெற்கு, மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடிகளின் மொழியிற் காணப்பெறும் இடப்பெயர்களை வியக்கத்தக்க முறையில் ஒத்திருக்கின்றன. இவ்வொப்புமைக்குக் காரணங்கள் பல கூறலாமாயினும், ஒப்புமை இருக்கின்றதென்பதை மட்டிலும் மறுத்தற்கில்லை. ஆனால், ஆஸ்திரேலியத் தன்மை இடப் பெயர், திராவிட மொழித்தன்மை இடப்பெயரைவிட, திபேத்திய மொழித்தன்மைப் பெயரை மிகுதியும் ஒத்துள்ளது என்பது இதுகாறுங் கவனிக்கப்படவில்லை. கீழ்வரும் ஒப்புமைப் பட்டியை நோக்குக!

இதில் ஆஸ்திரேலியத் தன்மைப் பெயரின் பகுதி திபேத்திய மொழியையும் இந்து-சீன இனத்தையும் பெரிதும் ஒத்திருப்பினும், பன்மையாகும் பொழுது அது திராவிட மொழிகளை, அதிலும் சிறப்பாகத் தெலுங்குமொழியை, 

திராவிடம் ஆஸ்திரேலியம் திபேத்தியம் சீனம்
தன்மை
ஒருமை
நான், யான்,
நா,என்
ங,ஙைஇ,
ஙத்ஸ,ஙன்ய
ங,ஙெ,ஙெத் ஙொ


ஒத்திருக்கிறது. தெலுங்கில் பன்மை லு என்ற விகுதி சேர்ப்பதால் ஏற்படுகிறது. அதே போன்று ஆஸ்திரேலிய மொழிகளிலும் லு, லி, ட்லு, ட்லி இவற்றைச் சேர்ப்பதால் பன்மை ஏற்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மொழிகளும் இவ்வகையில் தெலுங்கை ஒத்துள்ளன. எடுத்துக்காட்டாக, திமல்[9] நா (=நீ) என்பதன் பன்மை நியெல் (=நீர், நீங்கள்) என்பதாம். தன்மையிலும் ஆஸ்திரேலிய மொழியின் இருமைப் பெயர்கள், பன்மைப் பெயர்கள் ஙலு, ஙட்லு, ஙட்லி, ஙலத என்பன போன்றவை. இதனுடன் தெலுங்குப் பெயர்கள் பன்மையாகும் முறையைக்கூர்ந்து நோக்குக. (எ-டு): வா(ண்)டு (=அவன்), வா(ண்)ட்லு (=அவர்கள்) ; தமிழிலுங்கூட 'நான்' என்பதன் பன்மையான 'நாங்கள்' இதனை மிகவும் அடுத்திருப்பது காண்க !

ஆஸ்திரேலிய முன்னிலை இடப்பெயர்களும், திராவிட முன்னிலை இடப்பெயர்களும் தன்மை, பன்மை இரண்டிலும் தெளிவாக ஒத்திருக்கின்றன. அதிலும் விகுதியுடன் மட்டுமன்றிப் பகுதியிலும் முழு ஒற்றுமை இருப்பதுங் காண்க! திராவிட மொழிகளில் பொதுப்படையான (முன்னிலைப்) பெயர்களின் ஒருமை நீன் என்பதும், பன்மை நீம் என்பதும் ஆம். இவற்றுள் நீ என்பதே பகுதிப் பொருள் தருவது. இஃது ஈரெண்களிலும் ஒன்றாகவே இருக்கிறது. ஒருமையில் ஒருமை விகுதியாக னகரமும் (ன்), பன்மையில் பன்மை விகுதியாக மகரமும் (ம்) வருகின்றன. சில இடங்களில் பன்மை விகுதியாகிய மகரத்திற்கு மாறாகப் படர்க்கைப் பன்மையின் விகுதியாகிய ரகரம் வந்து நீர் (தெலுங்கு மீரு ; அதாவது மீர்+உ) ஆகலும் உண்டு. ஆனால், புதிதாக வந்த இந்த ரகர விகுதி,எழுவாயில், அதிலும் தனியான சொல்லில் மட்டுமே வருகிறது. பிற விகுதிகள் உருபுகள் சேர்ந்த பகுபதங்களுள் வரும்பொழுது மகர விகுதியே வருதல் காண்க (எ-டு): நாங்கள் = நாம் + கள்; நீங்கள் = நீம்+கள்; உங்கள் உம்முடைய முதலாயின. ஒருமையில் முன்னிலைப் பெயரிலுள்ள உயிரொலி இகரமேயாயினும், பன்மையில் இகரத்தினிடமாக உகரமும் வருகிறது. (எ-டு): பிராகுவி : நும் = நீங்கள் ; செந்தமிழ்: நும்(உங்களுடைய). இக்காலக் கன்னடம் இந் "நீம்" என்பதன் மகரத்தை வகரமாக மெலிவித்து, "நீஉ அல்லது நீவு" ஆக்குகின்றது காண்க : இம்மாற்றங்கள் ஒவ்வொன்றிலும் இவ்வாறு ஆஸ்திரேலிய மொழியியல்பு திராவிட மொழியியல்பை முற்றிலும் ஒத்திருப்பது விளக்க முடியாததொரு புதுமையேயாம்.

கீழ்வரும் ஒப்புமைப்பட்டியில் இருமை, பன்மை ஆகிய ஈரெண்களும் (இரண்டின் பொருளும் திராவிட மொழிகளில் ஒன்றேயாதலால்) பன்மை என்றே குறிக்கப்படுகின்றன.


தமிழ் தன்மை ஒருமை இரண்டாம் வேற்றுமை உரு 'என்னை' என்பதையும் ஆஸ்திரேலிய இரண்டாம் வேற்றுமை உரு 'என்மொ' என்பதையும் ஒப்புநோக்குக!

ஆஸ்திரேலிய மொழிகளின் மொழியமைப்பு சித்திய இனத்துடன் பெரும்பாலும் ஒற்றுமையுடையதாகவே


l.Nivu, 2.Niwu

திராவிடம் ஆஸ்திரேலியம்

முன்னிலை ஒருமை நின்ன, ஙின்னெ, நீம்,நிம் ஙிந்தொஅ,நிங்தெ.

முன்னிலைப் பன்மை நீர், நும், நிமெதூ, நுர,நிவ,ஙுர்லெ

காணப்படுகிறது: முன்னடைகளின் இடமாகப் பின்னடைகளை வழங்குதல்; தன்மைப் பன்மையில் ஒன்று முன்னிலை நீங்கலாகவும் ஒன்று அதனை உளப்படுத்தியும் இரண்டு வடிவங்கள் உடைமை; தன்வினை, பிறவினை முதலியவற்றை விகுதி சேர்ப்பதாலேயே தெரிவித்தல்; சொற்களின் அடுக்கியல் அமைப்பு, வாக்கியத்திலுள்ள சொற்றொடர்பு முறை ஆகிய இவையனைத்திலும் இவை திராவிட மொழிகளையும், துருக்கியம், மங்கோலியம் போன்ற பிற சித்திய மொழிகளையும் ஒத்தே இருக்கின்றன. ஆனால், ஒன்றிரண்டு இடங்கள் நீங்கலாக, பாலினேஸிய மொழிகளுடன் இவை வேறுபடுகின்றன. ஆஸ்திரேலிய மொழிகளில் திரட்டப்பட்ட சொற்றொகுதிகளில் இவ்வொற்றுமைகளை உறுதிப்படுத்தும் வேறுவிவரங்கள் இல்லையாயினும், இவ்வொற்றுமைகள் தற்செயலானவையென்று விடத்தக்கவையல்ல.

நடு ஆப்பிரிக்காவில் போர்னு நாட்டில் பேசப்படும் கனுாரி அல்லது போர்னு என்னும் மொழிக்கும் திராவிட மொழிக்கும் தொடர்பிருப்பது மேற்கூறிய ஒப்புமையினும் புதுமையானதேயாம். இவ்வொப்புமைகள் பொதுப்படையானவை என்பது உண்மையே. அவையாவன :—கனுாரி


1.Polynesian, 2.Bornu, 3.Kanuri யும் "அடுக்கியல்" அமைப்புடையது; உறவு அடைகளை முன்னடையாக்காமல் பின்னடையாக்குகிறது; ஐயம், வினா, அழுத்தம் முதலியவற்றைக் குறிக்க (திராவிட மொழிகளுக்கே சிறப்பான முறையில்) அடைகளைப் பெயர் வினைகளுடன் சேர்க்கிறது; வினைக்கு எதிர்மறை உருவும் உண்டு. ஹங்கேரிய மொழியைப்போன்று தன்வினை பிறவினை உண்டு. திராவிட மொழிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமை இருப்பதைக் குறிப்பது முன்னிலை ஒருமையாகிய 'நி' என்பதாகும். இதுவும் திராவிடம் பிராகுவி,சீனம், பெஹிஸ்தன் அட்டவணை மொழி, ஆஸ்திரேலியம் முதலிய மொழிகள் அனைத்திற்கும் பொதுவானதென்பது மேலே காட்டப்பட்டது. கனுாரி மொழி மேல ஆப்பிரிக்காவின் மொழிகளிலிருந்து மிகுதியும் வேற்றுமைப்படுவதால் அது தனிப்பட்ட ஆராய்ச்சிக்குரியதாகும்".


1. Subjective verb, 2. Objective verb, 3. See Koelle's Grammar of Bornu.

  1. Professor Rask of Copenhagen
  2. Semitic
  3. Asglutinative
  4. Prichard
  5. 1. Professor Pott and Friedrich Muller
  6. 2.Dr. Block
  7. 3. Castren
  8. Dr. Gustar Schlegel in “ Sinico-Aryaca ” (Batavia 1872
  9. Dhimal