குடும்பப் பழமொழிகள்/குடும்பம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

குடும்பம்

சிறு குடும்பத்திற்கு வேண்டியவை விரைவிலேயே கிடைக்கும்.
- இங்கிலாந்து
உன் பாட்டனாருக்கும் ஓர் அத்திப்பழம் கொடுத்து ஆதரித்து வா.
-( , , )
உறவினரைக் கடவுளே கொடுத்து விடுகிறார், நண்பர்கன மட்டும் நாமே தேர்ந்து கொள்ளலாம்.
-இங்கிலாந்து
உறவினர் குறைந்திருத்தல் ஓர் அதிருஷ்டம்தான்.
- கிரீஸ்
தன் குடும்பத்தை விட்டு ஓடுபவன் நெடுந்தூரம் சென்று கொண்டே யிருக்கவேண்டும்.
-லத்தீன்