குடும்பப் பழமொழிகள்/சகோதரர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சகோதரர்

சகோதரனைப் போன்ற நண்பனில்லை, சகோதரனைப் போன்ற பகைவனுமில்லை.
- இந்தியா
கைகளும் கால்களும் போன்றவர்கள் சகோதரர்கள்.
-சீனா
உடன் பிறந்தார்கள் ஒத்து வேலை செய்தால், மலைகளெல்லாம் பொன்னாகும்.
-( , , )
சகோதரர்களாயிருங்கள், ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
-அரேபியா
சொந்த சகோதரர்கள் கவனமாகக் கணக்கு வைத்திருப்பார்கள்.
சீனா
இளைய சகோதரனுக்குப் புத்தி அதிகம்.
-இங்கிலாந்து
சகோதரன் என்பவன் இயற்கையாக நமக்கு அளித்துள்ள நண்பன்.
-ஃபிரான்ஸ்
அவர்கள் சகோதரர்களானாலும், அவர்களுடைய பைகள் சகோதரிகளில்லை.
- துருக்கி
தாயும் பிள்ளையும் ஒன்றானாலும், வாயும் வயிறும் வேறு.
-தமிழ்நாடு
மூன்று சகோதரர்கள் மூன்று கோட்டைகள்.
- போர்ச்சுகல்