கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கூடிப் பிடிப்போம்

விக்கிமூலம் இலிருந்து

37. கூடிப் பிடிப்போம்

அமைப்பு:

பத்து அல்லது பதினைந்து பேர்கள் இருந்தால் இந்த விளையாட்டை ஆட எளிதாகவும் இனிதாகவும் இருக்கும்.

தேவைக்கேற்ப ஆடுகள எல்லையைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆடுகளத்தினுள் எல்லோரும் நின்று. கொண்டிருக்க, ஒருவர் மட்டும் எல்லைக்கு வெளியே தயாராகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை:

வெளியே நிற்பவர் இப்பொழுது, ஆடுகளத்தினுள் உள்ளவர்களைத் தொட்டுப் பிடிக்க முயல வேண்டும்.

முதலில் அவரிடம் யார் சிக்குகின்றாரோ. அவர் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை. அவர் தொட்டவருடன் சேர்ந்து கொள்கிறார். ஆகவே, அவர்கள் இருவரும் கைகளை இணைத்துக் கொண்டு, ஒன்று சேர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது, அந்த இருவரும் சேர்ந்து மற்றவர்களை தொட முயல்கின்றனர் மூன்றாவது ஆள் அவர்களிடம் பிடிபட்டால், உடனே அவரும் அவர்களுடன் கைகளை, சேர்த்துக்கொண்டு மூவராகி விடுகின்றனர்.

மூன்றுபேரும் விரட்டுவோராக மாறி ஆட, இவ்வாறு ஆட்களைத் தொடத் தொட, எல்லோரும் கூடி சேர்ந்து, கைகளைப் பிணைத்துக் கொண்டு, கடைசி ஒருவர் இருக்கும் வரை பிடிக்க வேண்டும்.

ஆட்ட இறுதியில் விரட்டுவோர் அதிக எண்ணிக்கையில் இருக்க, விரட்டப்படுபவர் ஒருவர்தான் இருப்பார்.

கடைசி வ்ரை, கூடிப் பிடிப்பவரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பவரே வெற்றி பெற்றவராவார்.