சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்/நான் கடைசியாகக் கண்டேன்!

விக்கிமூலம் இலிருந்து

விடவா வேறு உள்ளது? நோய், வறுமை, பஞ்சம், புயல், வெள்ளம் முதலிய இயற்கைச் சம்பளங்களால் மாந்தருக்கு எவ்வளவு இம்சை?

கடவுனை தயாபரன், சர்வ ரட்சகன், ஆபத் பாந்தவன் அன்பன் என்ற மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க முடிமா சமணர்களைக் கழவில் ஏற்றினது கடவுள் பெயரால் அன்றோ? கோடான கோடி பிசாசு பிடித்தவர்களென்று பெண் மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ? கிறிஸ்தவரும் முஸ்லீலும் கோடி கோடியாக 500 வருட காலம் கொடும் போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி பெயரால் எத்தனை கோவில்கள் கட்டிடங்கள் இடிந்தன. எத்தனை நாடுகள் நகரங்கள் நாசமாயின.?"

இவ்விதமாக, எதிரி திணரும்படியான கேள்விகளைப் பச்சை பச்சையாகக் கேட்பார் மா. சிங்காரவேவர். அவரும் மனப்பண்பிலும், மதியூகத்திலும் அவருடைய இணையாக இருந்த பெரியாரும் ஒன்று கூடி, சுயமரியாதை இயக்கத்தை நடத்திய போது, நாடே அதிர்ந்தது. சர்க்காரும் நடுங்கிற்று என்று கூறலாம். காசியில் சிக்கிக்கிடந்த மக்களை அவர்கள் கைபிடித்து இழுத்து மாஸ்கோவுக்கு அழைத்தனர்.

நான் கடைசியாகக் கண்டேன்!

நான் கடைசியாக அவரைக் கண்டது, நான் மேலே குறிப்பிட்ட அவருடைய அருங்குணத்தை விளக்கக்கூடிய ஒரு சம்பவமாகவே இருந்தது. இரண்டு முதியவரும், பெரியார் இராமசாமியும், தோழர் சிங்காரவேலரும் ஒரே மேடையிலே உட்கார்ந்திருந்தனர், 20...6...43-ல் சென்னை செயிண்ட்மேரி மண்டபத்தில். அன்று அங்கு தீண்டாமை ஒழிப்பு நாள்! தளர்ந்த உடல், தள்ளாடும் நடை, நரைத்த தலை, இக்கோலத்திலே இருந்தார் மா. சிங்காரவேலு. தீண்டாமை ஒழிப்பு தினம் என்று கேள்விப்பட்டதும், அவர், "தள்ளாமை"யையும் மறந்து, அங்கு வந்திருந்தார். பாட்டாளி மக்களின் சுயமரியாதைக்காகவும் சுகவாழ்வுக்காகவும் போராடிய அந்தப் புரட்சி வீரரை அன்று நான் கடைசி முறையாகக் கண்டேன். அவர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டேன், திடுக்கிடவில்லை, ஆனால் திகைத்தேன். இனி அத்தகைய ஓர் மாவீரன் கிடைப்பாரா, என்று. மறைந்த மாவீரருக்கு நமது மரியாதையைச் செலுத்துவோமாக. அவர் வகுத்த வர்க்கம் பழுதுபடாதபடி பாதுகாத்து, அவருடைய இலட்சியமாகிய மக்கள் ஆட்சி மலருவதற்காக, நாமும் உழைப்போமாக என்று மாவீரரை மதிப்போரெல்லாம் உறுதிகொள்வார்களாக.