உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

தேசியம், சமதர்மம், பொதுவுடைமை இவை போன்ற இயக்கங்கள் ஒவ்வொன்றும் தமிழன் இதயத்தைக் கவர்த்தன, அவன் தன்னலமறந்து, தன் நிலையழிந்து, தியாகத்தில் முந்தி குதித்தான், முனைந்து பங்கு கொண்டான். ஆனால் இவ்வியக்கங் களெதுவும் அவனை குழ்ந்துள்ள அடிமைக் கவசங் களை ஊடுறுவ முடியவில்லை. ஏறுவோர் ஏற உதவும் ஏணி அவன்; ஏணி யிருந்தபடி இருப்பதுபோல், ஏறு வோர் தொகையால் நலிவதுபோல் அவன் இருந்து நலிந்தார். இந்நிலை ஏன்?

பொதுநலனுக்கு தானுழைத்தால் பொதுநலத் தில் தனக்கும் பங்கு இருப்பது உறுதி என அவன் எண்ணினான். பிறர் நலத்துக்குத் தான் உழைப்பது பெருமை; தன்நலத்தைப் பிறர் கவனிக்கும் என்று அவன் இருந்தான்.

தொழிலாளி தன் கடமை செய்துவிட்டு, உரிமைகளை முதலாளி தருவான் என்று இருந்தால் அவன் கதி என்ன? அடிமை அல்லது வேலையாள் தன் கடமை செய்துவிட்டால் முதலாளி தன்னையும் ஒரு முதலாளியாக நடத்துவான் என்று எதிர்பார்க்க முடியுமா?

பிறநாடுகள், மக்கள் அடிமைத்தனம் நீங்கினால், தன் அடிமைத்தனமும் நீங்கும் என நினைத்தான். தமிழன் பாவம்! தான் அடிமைகளின் அடிமை; அடிமைகள் தளை நீங்கினால் தன் தளைமீதுள்ள கட்டுப் பாடு நீங்கித் தளை இரட்டிப்பாகும் என்பதை அவன் அறியான்!

உலக மக்கள், பிற நாட்டினர் அனைவர்க்கும் பொதுவான தளைகள் மட்டுமன்றி, தமிழனுக்கு சிறப்பான தளைகளையும் அகற்ற முனைந்த இயக்கங்கள் தமிழியக்கமும் சுயமரியாதை இயக்கமும் மட்டுமே. இவற்றின் தேசியம் தமிழன் உரிமைகளை விலக்கும் தேசியமன்று. இவற்றின் சமதர்மம் தமிழனடிமைத் தளையைக் காணமுடியாத சமதர்மமன்று. இவற்றின் பொதுவுடைமையை தமிழனும் மனிதன் என்பதை மறக்கும் பொதுவுடைமையன்று.

தேசியம். சமதர்மம், பொதுஉடைமை ஆகிய முத்திறையிலும் முனைந்து நின்று உழைத்த பெரியார் தோழர் சிங்காரவேலு. தமிழகத்துக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கே. உயகிற்கே உழைத்த சீரியர் அவர். ஆனால் அவரது இந்தியாவில் தமிழகம் அடங்கியிருந்தது . அவரதுஉலகில் தமிழகமும் இடம்பெற்றிருந்தது. அவரும் ஒரு தமிழன், இந்திய தேசியம், சமதர்மம், பொதுவுடைமை ஆகியவை; அவரும் ஒரு மனிதர் என்பதை மறந்த இவை போதாதா? இந்தியாவின் தமிழ் நாட்டின் பத்திரிகை உலகின் கண்களுக்கு அவர் தெரியாமல்போக வேறு என்ன வேண்டும்?

வருங்காலப் பகுத்தறிவுச் சமதர்ம உலகில் தமிழன் மதிக்கப்படாமல் போகான்—அவன் இறந்து பட்டாலன்றி அவனுக்கு இடம் கிடைத்தே தீரும். அப்போது, "யார் சிங்கார வேலு? எந்த நாடு அவரைப் 'பெற்றெடுத்தது? அவர் பேசும் பேறு பெற்ற மொழி எது? என உலக மக்கள் கேட்பர். அக்காலத்தில் 'அவரை எங்கட்குத் தெரியாதே', 'அவர் தமிழ் நாட்டில் இருந்ததில்தில்லையே என்று, தமிழன் கூறாதிருக்க வேண்டுமானால், அவரையும் போன்று தமிழனுக்கு உழைத்து உலகுக்கு உழைத்த பெரியார்களையும் பற்றிய வரலாறுகள் தமிழகத்தை இன்றும் புறக்கணியாத தமிழராமாவது எழுதப்பட வேண்டும்.

தோழர் சி. என். அண்ணாதுரை எம். ஏ. அவர்களின் சிறு நூல் "சிந்தனை சிற்பி சிங்காரவேலர்" அவ்வறிவுலகப் பெரியாரை அத்தமிழரை யாவரும் காண ஒரு சில பக்கங்களிலேயே முன்னே கொண்டு வந்து நிறுத்திக் காட்டுகிறது. அவரை அளந்தறிவதன் மூலம் தமிழன் தன் நிலை. தன் கடமை ஆகியவற்றை அளந்தறிவானாக, அவ்வணம் அறிய அறிந்து ஆமுறை செயலாற்ற இச்சிறு நூல் உதவுவது உறுதி.

தமிழ்மனை,
திருவல்லிக்கேணி.

கா. அப்பாதுரை
எம்.ஏ. எல். டி., வீசாரத்